பக்கங்கள்

வியாழன், 16 ஜனவரி, 2020

மக்தப் மாணவர்கள் மனனம் செய்ய வேண்டிய பாடம்.1




بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيم

 رَّبِّ زِدْنِي عِلْمًا

ரப்பி ஸித்னி இல்மா.

இறைவா எனக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக.

இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து.

1.கலிமா.

2.தொழுகை.

3.நோன்பு.

4.ஜக்காத்து.

5.ஹஜ்.


. 1.  அவ்வல் கலிமா தய்யிப்

لَاِالَهَ اِلَّااللهُ مُحَمَّدُ رَّسُولُ اللهِ

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்


பொருள்: வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி  صلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராக இருக்கிறார்கள்.

2.  இரண்டாம் கலிமா ஷஹாதத்

اَشْهَدُ اَنْ لَاِالَهَ اِلَّاالله وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ                
அஷ்ஹது அ(ன்)ல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு

பொருள்: நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு எவ்வித இணையுமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் நிச்சயமாக முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் அவனுடைய அடியாரும் இன்னும் அவனுடைய திருத்தூதருமாக இருக்கிறார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.

3.  மூன்றாம் கலிமா தம்ஜீத்

سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَاِالَهَ اِلَّااللهُ وَاللهُ اَكْبَرْ وَلَا حَوْلَ وَلَاقُوَّةَ اِلَّا بِا للهِ الْعَلِىُ الْعَظِيْمَ

ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹில் அலிய்யில் அழீம்.

பொருள்: அல்லாஹு தஆலா மிகப் பரிசுத்தமானவன். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன். (பாவங்களை விட்டுத்) திரும்புதலும், இன்னும் (நன்மைகள் செய்ய பாக்கியமும் அல்லாஹு தஆலாவின் உதவியைக் கொண்டே தவிர இல்லை.

4.  நான்காம் கலிமா தவ்ஹீத்

لَاِالَهَ اِلَّاالله  وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِى وَيُمِيْتُ بِيَدِهِ الْخَيْرِ وَهُوَ عَلَى كُلِّى شَىْءٍ قَدِيْرْ
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது பிய திஹில் கைரு வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு எவ்வித இணையுமில்லை. அரசாட்சியெல்லாம் அவனுக்கே உரியது. புகழனைத்தும் அவனுக்கே சொந்தமாகும், அவனே (எல்லாப் பொருட்களுக்கும்) உயிர் கொடுக்கிறான்; அவனே (எல்லாப் பொருட்களையும்) மரணிக்கச் செய்கிறான், நன்மையெல்லாம் அவன் கைவசமே இருக்கின்றன. அவன் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி உடையவன்.

5.ஐந்தாம் கலிமா. ரத்துல் குப்ர்.

اَلَّلهُمَّ  اِنِّى اَعُوذُ بِكَ مِنْ اَنْ اُشْرِكَ بِكَ شَيْئًا وَاَنَا اَعْلَمُ بِهِ وَاَسْتَغْفِرُكَ لِمَا لَا اَعْلَمُ بِهِ تُبْتُ عَنْهُ وَتَبَرَّأتُ اَنْ كُلِّى دِيْنِى سِوَا دِيْنى الْاِسْلَامْ وَاَسْلَمْتُ وَاَمَنْتُ وَاَقُولُ لَاِالَهَ اِلَّاالله مُحَمَّدُ رَّسُولُ الله
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அன் உஷ்ரிக பிக ஷைஅன்(வ்) வஅன அஃலமு வஅஸ்தஃபிருக லிமாலா அஃலமு இன்னக அன்த அல்லாமுல் குயூப் துப்து அன்ஹு வதபர்ரஃது அன் குல்லி தீனின் ஸிவாதீனில் இஸ்லாம் வ அஸ்லம்து வ ஆமன்து வ அகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி


பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் அறிந்தவனாயிருக்கும் நிலையில் உனக்கு எப்பொருளையும் இணை வைப்பதை விட்டும் உன்னிடம் நான் காவல் தேடுகிறேன். நான் அறியாமல் செய்த பாவங்களுக்காக உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். நிச்சயமாக நீ மறைவான விசயத்தை நன்கு அறிந்தவன். நான் (பாவங்களான) அதனை விட்டும் தவ்பாச் செய்து மீண்டு விட்டேன். இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர மற்றெல்லா மதங்களை விட்டும் நான் நீங்கி விட்டேன். நான் இஸ்லாமாகி ஈமான் கொண்டு கூறுகிறேன் லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்.

ஈமானே முபஸ்ஸல்.

اَمَنْتُ بِاللهِ وَمَلَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الَاخِرِ وَالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ مِنَ اللهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتُ
ஆமன்த்து பில்லாஹி வமலாயிகதிஹி வகுதுபிஹி வரஸூலிஹி வல்யவ்மில் ஆகிரி வல்கத்ரி கைரிஹி வஷர்ரிஹி மினல்லாஹி தஆலா வல்பஃஸி பஃதல் மவ்த்.

பொருள்.
அல்லாஹ்வைக் கொண்டும், மலக்குமார்களைக் கொண்டும், வேதங்களைக் கொண்டும், தூதர்களைக் கொண்டும், மறுமை நாளைக் கொண்டும், மனிதனின் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமை அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே ஏற்படுகிறது என்றும், இறந்த பின் மீண்டும் நாம் எழுப்பப்படுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்வதென்றால் என்ன...?

அல்லாஹ் ஒருவன் என்றும் அவன் தனது அனைத்து விசயத்திலும் இணை துணையற்றவன் என்றும், அவனுக்கு தாய் தந்தை மனைவி மக்கள் உற்றார் உறவினர் என்று யாருமில்லை என்றும், உணவு தண்ணீர் உறக்கம் மறதி அழுகை சிரிப்பு நோய் சுகம் இவை எதுவும் அல்லாஹ்வுக்கு கிடையாது என்றும். நிறம் நீளம் குட்டை நெட்டை அகலம் ஆகிய அனைத்தையும் விட்டு நீங்கியவன் என்றும் அல்லாஹ் ஆணுமல்ல பெண்ணுமல்ல திருநங்கையுமல்ல என்றும் காலம் திசை சந்தேகங்களை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று நம்பிக்கை கொள்வதற்குச் சொல்லப்படும்.


மலக்குமார்களைக் கொண்டு ஈமான் கொள்வது என்றால் என்ன...?

மலக்குமார்களைக் கொண்டு ஈமான் கொள்வது என்றால் மலக்குமார்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள் என்றும். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல திருநங்கையுமல்ல என்றும் அவர்கள் நாய் பன்றி உருவத்தில் வரமாட்டார்கள் என்றும் அவர்களில் சிலர் நபிமார்கள் ரசூல்மார்களிடம் தூதுர்களாக வருவார்கள் என்றும் அல்லாஹ் கூறியதை அப்படியே செய்வார்கள் என்றும் அவர்களில் சிலர் உயர் பதவி சிலர் கீழ் பதவி உடையவர்கள் என்றும் அவர்களுடைய உணவு தஸ்பீஹ் என்றும் நாய் உருவப்படம், உருவச்சிலை அருவருக்கத்தக்க இடங்களுக்கு ரஹ்மத்துடைய மலக்குமார்கள் வரமாட்டார்கள் என்றும் அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறியமாட்டார்கள் என்றும் மலக்குமார்கள் அல்லாஹ்வுக்கு எந்த நிலையிலும் மாறு செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கைக் கொள்வதற்குச் சொல்லப்படும்.


(சுருக்கமாக வரும் இந்த எழுத்துக்களை முழுமையாக உச்சரிக்க வேண்டும்.)

(ஸல்) என்றால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

(அலை) என்றால் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்.

(ரலி) என்றால் ரலியல்லாஹு தஆலா அன்ஹு.

(ரஹ்) என்றால் ரஹ்மத்துல்லாஹி அலை.

(கத்) என்றால் கத்தசல்லாஹு சிர்ரவுல் அஸீஸ்.

முக்கியமான பத்து மலக்குமார்கள்.

1.ஜிப்ரயீல் (அலை) இவரின் வேலை நபிமார்களுக்கு வஹி அறிவிப்பது, வேதம் கொண்டுபோய் கொடுப்பது.

2. மீக்காயீல் (அலை) இவரின் வேலை மழை காற்று இடி மின்னல் உணவு போன்றவை இவரின் பொறுப்பு.

3. இஸ்ராபீல் (அலை) இவரின் வேலை சூர் கொம்பு ஊதுவது.

4. இஸ்ராயீல் (அலை) இவரின் வேலை ஆன்மாக்களை கைப்பற்றுவது.

5. ரிழ்வான் (அலை) இவரின் வேலை சொர்கத்தைப் பாதுகாப்பது.

6. மாலிக் (அலை) இவரின் வேலை நரகத்தை பாதுகாப்பது.

7.8. கிராமன் காதிபீன் (அலை) இவர்களின் மனிதனின் நன்மை தீமைகளை எழுதுவது.

9.10. முன்கர், நகீர். (அலை) இவர்களின் வேலை கப்ரினுள் கேள்வி கேட்பது.


வேதங்களைக் கொண்டு ஈமான் கொள்வதென்றால் என்ன...?

வேதங்களைக் கொண்டு ஈமான் கொள்வதென்றால் அல்லாஹ் இறக்கி வைத்துள்ள வேதங்கள் அனைத்தும் உண்மையென நம்பிக்கைக் கொள்வதற்கு சொல்லப்படும்.

வேதங்கள் நான்காகும்.

1. முதலாவது தவ்ராத் வேதம் இதை நபி மூஸா (அலை) அவர்களுக்கு அப்ரானி மொழியில் அல்லாஹ் இறக்கி வைத்தான்.

2. இரண்டாவது ஜபூர் வேதம். இதை நபி தாவூத் (அலை) அவர்களுக்கு யூனானி மொழியில் அல்லாஹ் இறக்கி வைத்தான்.

3. மூன்றாவது இன்ஜீல் வேதம். இதை நபி ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி மொழியில் அல்லாஹ் இறக்கி வைத்தான்.

4. நான்காவது (புர்கான்) குர்ஆன் வேதம். இதை நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்களுக்கு அல்லாஹ் அரபி மொழியில் அருளினான்.

( குர்ஆனிலுள்ள ஒரு சூராவையோ அல்லது ஒரு ஆயத்தையோ அல்லது குர்ஆனிலுள்ள ஒரு எழுத்தையோ இது குர்ஆனல்ல என ஒருவர் மறுத்தால் அவர் காபிராகி விடுவார். அவர் கலிமா சொல்லி தவ்பா செய்து தன் ஈமானை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். )


நபிமார்களைக் கொண்டு ஈமான் கொள்வதென்றால் என்ன...?

நபிமார்களைக் கொண்டு ஈமான் கொள்வதென்றால் அல்லாஹ்வுடைய தூதர்களாகிய நபிமார்கள் ரசூல்மார்கள் அனைவரும் ஆண்கள் என்றும், சிறிய பெரிய பாவங்களை விட்டு பாதுகாக்கப்பட்டவர்கள் என்றும், உடலில் எவ்வித குறைகள் இல்லாதவர்கள் என்றும், உண்மையும் நம்பிக்கையும் உடையவர்கள் என்றும், அல்லாஹ்வின் கட்டளைகளை மக்களுக்கு எத்திவைப்பவர்கள் என்றும்,
நபிமார்களில் முதலாமவர் நபி ஆதம் (அலை) அவர்களாகும் இறுதி நபி  நமது நாயகம் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் என்றும்  நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நபித்துவம் (நபிமார்கள்) கிடையாது என்றும் நபிமார்களின் உடலை மண் தீண்டாது என்று நம்பிக்கைக் கொள்வதற்கு சொல்லப்படும்.


மறுமை நாள் கொண்டு ஈமான் கொள்வதென்றால் என்ன...?

மறுமை நாள் கொண்டு ஈமான் கொள்வதென்றால் மனிதன் இயற்கையாகவோ அல்லது திடீர் மரணத்தின் மூலம் இறந்து அவனை அடக்கம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவனது உயிரை மலக்குமார்கள் கைப்பற்றி அவனிடம் கேள்விகளை கேட்பார்கள் அந்த மனிதர் நல்லவராக இருந்தால் அவர்களுடைய கேள்விகளுக்கு சரியாக பதில் கூறுவார் அவருக்கு சொர்கத்தின் வாசலைத் திறந்து இன்பத்தை அனுபவிக்கச் செய்வார்கள்.
அவர் தீயவராகவோ ஈமான் கொள்ளாதவராகவோ இருந்தால் அவர்களுடைய கேள்விக்கு பதில்கூற முடியாது. அவருக்கு நரகத்தின் வாசலைத் திறந்து வைத்து அதன் வேதனையை அனுபவிக்கச் செய்வார்கள்.

இறுதியில் கியாமத் நாள் (உலக இறுதி நாள்)  வரும் அப்போது உலகத்தின் அனைத்து படைப்புகளும் அழிவதற்காக இஸ்ராபீல் (அலை) என்ற மலக்கு சூர் என்னும் கொம்பு ஊதுவார். அதன் சப்தம் கேட்டு உலகின் அனைத்து படைப்புகளும் அழிந்து விடும். பின்பு இரண்டாவது சூர் ஊதும்படி அல்லாஹ் கூறுவான். அவர் ஊதியவுடன் இறந்த படைப்புகள் அனைத்தும் உயிர் பெற்றுவிடும்.

பின்பு மூன்றாவது சூர் ஊதும்படி அல்லாஹ் கூறுவான் அதன் பிறகு மஹ்ஷர் மைதானத்தில் படைப்பினங்கள் அனைத்தையும் ஒன்று கூட்டி உலகில் ஈமான் கொண்ட நல்லோர்களுக்கு அவர்களின் வலது கரத்தில் நன்மை தீமை பட்டோலை கொடுக்கப்படும். காபிர்களுக்கும் தியவர்களுக்கும் அவர்களின் இடது கையில் கொடுக்கப்பட்டு கேள்வி கணக்கு கேட்கப்படும்.
பின்பு அவர்களின் செயல்களை மீஸான் என்னும் தராசில் வைத்து நிறுத்துப் பார்க்கப்படும். நன்மையின் எடை அதிகமாக இருந்தவர்கள் ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடந்து செல்வார்கள். மேலும் ஹவ்ளுல் கவ்தர் என்ற தடாகத்தில் நீர் தேக்கத்தில் நீர் அருந்தி தாகம் தீர்ந்து லிவாவுல் ஹம்து என்ற கொடியின் நிழலில் இருந்து அர்ஷின் நிழலிலும் தங்கி பின்பு சொர்க்கம் சென்றடைவார்கள்.

ஒளு

ஒளூச் செய்யும் முறை.

1. முடிந்தால் கிப்லாவை முன்னோக்கி அமர வேண்டும்.

2. ஒளுச் செய்கிறேன் என்று நிய்யத் செய்ய வேண்டும்.

3. இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவவேண்டும்.

4. பல் தேய்த்தல் மிஸ்வாக் செய்தல்.

5. வாய் கொப்பளிக்கும் போது மூக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

6. முகத்தை கழுவவேண்டும் தாடி இருந்தால் கோதி கழுக வேண்டும்.

7. வலது கையை முதலிலும் இடது கையை பிறகுமாக முழங்கை மூட்டு வரை இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும்.

8. தலைக்கு மூன்று முறை மஸஹ்  செய்ய வேண்டும்.

9. இரு காதையும் மூன்று முறை தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும்.

10. இரு கால்களையும் கணுக்கால் வரை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

11. ஒவ்வொரு உறுப்புகளையும் வரிசையாக கழுக வேண்டும்.

12. ஒரு உறுப்பு கழுவி காய்வதற்குள் அடுத்த உறுப்பை கழுக வேண்டும்.

ஒழு செய்யும் போது ஓதும் துஆ.

இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவும்போது.
அவூது பில்லாஹ்வுடன் பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பிக்க வேண்டும்.

வாய் கொப்பளிக்கும் போது.

அஸ்தஃபிருல்லாஹில் அழீம்.

முகத்தைக் கழுகும் போது.

اَلَّلهُمَّ بَيِّضْ وَجْهِى يَوْمَ تَبَيَّضُ وَجْهُ الْاَوْلِيَئِكَ وَلَا تَسْوَتُّ وَجْهِى يَوْمَ تَسْوَدُّ وَجْهُ الْاَعْدَئِكَ

அல்லாஹும்ம பையில் வஜ்ஹி பிநூரிஹி யவ்ம தபய்யளுல் வஜ்ஹுல் அவ்லியாயிக்க.  வலா தஸ்வத்து வஜ்ஹி பிலுல்மிஹி யவ்ம தஸ்வத்து வஜ்ஹுல் அஃதாயிக்க.

வலது கை முழங்கை வரை கழுகும் போது.

اَلّلَهُمَّ اَعْطِى كِتَابِى بِيَمِيْنِى وَحآسِبْنِى حِسَابَى يَسِيْرَا

அல்லாஹும்ம அஃதி கிதாபி பியமீனி வஹாஸிப்னி ஹிஸாபய் யஸீரா.

இடது கை கழுகும் போது.

اَلّلَهُمَّ اِنِّى اَعُودُ بِكَ اَنْ تُعْطِى الْكِتَابِى بِشِمَالِى وَرَاءَ مِنْ الوَّرَاءِ الظَّهْرِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக அன் துஃதில் கிதாபி பிஷிமாலி வராஅ மிவ் வராயில் ழஹ்ரி.

தலைக்கு மஸஹ் செய்யும் போது.

اَلَّلهُمَّ حَرِّمْ شَعْرِى وَبَشَرِى عَلَى النَّارْ
அல்லாஹும்ம ஹர்ரிம்  ஷஃரி வபஸரி அலன்நார்.

இரு காதையும் துடைக்கும் போது.

அல்லாஹும்ம அஸ்மிஃனி முனாதியை யுனாதி லில் ஜன்னத்தி.

இரு கால்களை கணுக்கால் வரை கழுகும் போது.

اَلَّلهُمَّ ثَبِّتْ قَدَمِ عَلَى الصِّرَاطِ الْمُسْتَقِيْمَ
அல்லாஹும்ம சப்பித் கதமீ அலா ஸிராத்தில் முஸ்தகீம்.

ஒளு செய்தபின் ஓதும் துஆ.

اَلّلَهُمَّ اجْعَلْنِى مِنَ التَّوَّابِيْنَ وَاجَعَلْنِى مِنَ الْمُتَهِّرِيْنَ وَجَعَلْنِى مِنْ عِبَادِكَ الصَّلِحِيْنَ سُبْحَانَكَ الَّلهُمَّ وَبِحَمْتِكَ اَشْهَدُ اَنْ لَاِالَهَ اِلَّا اَنْتَ اَسْتَغْفِرُكَ وَاَتُوْبُ اِلَيْكَ

அல்லாஹும் மஜ்அல்னி மினத் தவ்வாபீன். வஜஅல்னி மினல் முதஹ்ஹிரீன். வஜஅல்னி மின் இபாதிக்கஸ் ஸாலிஹீன். ஸுப்ஹானக் கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அன்லாஇலாஹா இல்லா அன்த்த அஸ்தஃபிருக்க வஅதூபு இலைக்.

ஒளுவை முறிக்கும் காரியங்கள்.

1. முன் பின் துவாரத்தில் இருந்து ஏதேனும் ஒன்று மலம் ஜலம் காற்று வெளியாகுதல்.

2. உடல் சோர்ந்து மெய்மறந்து தூங்குவது.

3. வாய் நிரம்ப வாந்தி எடுத்தல்.

4. பைத்தியம் பிடித்து புத்தி மாறுவது.

5. காயத்திலிருந்து ரத்தம் சீழ் நீர் வழிதல்.

6. தொழுகையில் வாய்விட்டு சிரிப்பது.

7. போதை ஏற்படுவது.

8. ஒரு பொருளை உண்பதால் போதையாகுதல்.

9. அந்நிய ஆண் பெண்  திரையின்றி தொடுவது.

10. மதம் மாறுதல்

11. மறைவிடத்தை தொடுதல்.


பாங்கு சொல்லும் முறை.
اَللهُ اَكْبَرْ اَلله اَكْبَرْ      اَللهُ اَكْبَرْ اَللهُ اَكْبَرْ
اَشْهَدُ اَنْ لَاِالَهَ اِلَّا الله
اَشْهَدُ اَنَّ مُحَمَّدُ الرَّسُولُ الله
حَىَّ عَلَى الصَّلَاةْ
حَىَّ عَلَى الْفَلَاحْ
اَللهُ اَكْبَرْ اَللهُ اَكْبَرْ
لَاِالَهَ اِلَّا الله

அல்லாஹு அக்பர் (4 தடவை)
பொருள்  :   அல்லாஹ் மிகப்பெரியவன்.

அஷ்ஹது அன்லாஇலாஹா இல்லல்லாஹ். (2 தடவை.)
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ். (2 தடவை.)
முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன்.

ஹைய்ய அலஸ் ஸலாத் (2 தடவை.)
தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்.

ஹைய்ய அலல் பலாஹ். (2 தடவை.)
வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்.

அல்லாஹு அக்பர்  (2 தடவை.)
அல்லாஹ் மிகப்பெரியவன்.

லாஇலாஹா இல்லல்லாஹ்  (1 தடவை.)
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

( சுபுஹ் பாங்கின் போது ஹைய்ய அலல் பலாஹ் என்று சொன்ன பிறகு
அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்.
தூக்கத்தை விட தொழுகை மேலானது.
என்று இரண்டு தடவை கூற வேண்டும். )


பாங்கு சொன்ன பிறகு ஓதும் துஆ.

اَلَّلهُمَّ رَبَّ هَادِهِ الدَّعْوَةِ التَّامَّةِ  وَالصَّلَوةِ الْقَائِمَةِ آتِ سَيَّدِنَا مُحَمّدِ نِ الْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَالدَّرَجَةَ الرَّفِيْعَةَ العَالِيَةَ الشَّرِيْفَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُوْدَا نِ الَّذِى وَعَدَّتَهُ وَرْزُقْنَا شَفَاعَتُهُ وَاوْرِدْنَا حَوْضَهُ يَوْمَ الْقِيَمَةِ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادْ

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தித் தாம்மத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி செய்யதினா முஹம்மதினில் வஸீலத்த வல்பழீலத்த வத்தரஜத்தர் ரபீஅத்த ஆலியத்தஷ் ஷரீபத்த வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதா நில்லதீ வஅத்தஹு வர்ஸுக்னா ஷபாஅத்ஹு வஊரித்னா ஹவ்ழஹு யவ்மல் கியாமத்தி இன்னக்க லா துஹ்லிபுல் மீஆத்.

இகாமத் சொல்லும் முறை.    (ஷாபிஈ)
اَللهُ اَكْبَرْ اَلله اَكْبَرْ      اَللهُ اَكْبَرْ اَللهُ اَكْبَرْ
اَشْهَدُ اَنْ لَاِالَهَ اِلَّا الله
اَشْهَدُ اَنَّ مُحَمَّدُ الرَّسُولُ الله
حَىَّ عَلَى الصَّلَاةْ
حَىَّ عَلَى الْفَلَاحْ
قَدْقَامَتِ الصَّلَاةْ
اَللهُ اَكْبَرْ اَللهُ اَكْبَرْ
لَاِالَهَ اِلَّا الله

அல்லாஹு அக்பர் (2 தடவை.)

அஷ்ஹது அன்லாஇலாஹா இல்லல்லாஹ் (1 தடவை)

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (1 தடவை.)

ஹைய்ய அலஸ் ஸலாத் (1 தடவை)

ஹைய்ய அலல் பலாஹ் (1 தடவை.)

கத்காமதிஸ் ஸலாத் (2 தடவை)

அல்லாஹு அக்பர் (2 தடவை.)

லாஇலாஹா இல்லல்லாஹ் (1 தடவை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக