பக்கங்கள்

சனி, 24 மார்ச், 2018

3. நபிமார்கள் வரலாறு .


(நாய் படைப்பு )

ஆதமை மண் உருவில் படைத்து கிடத்திப் போட்ட போது இபுலீஸ் அந்த உரு மீது கடும் சினம் கொண்டு அதன் மீது காறி உமிழ்ந்தான் . அது அதன் அடிவயிற்றில் விழுந்தது.


உடனே அந்த உமிழ் நீரை எடுத்தெரியுமாறு இறைவன் ஜிப்ரீலுக்கு  ஆணையிட்டான் .அதனால் அந்த இடத்தில் ஒரு குழி ஏற்பட்டது. அதுவே கொப்பூழாக ஆனது.

அப்பொழுது அவ்வுருவின் கொப்பூழி லிருந்து நெருப்பு வெளிவந்தது என்றும் அதுவே பொறாமையாகவும் , வயிற்றெரிச்சலின் வேற்றுமையாகவும் மாறியது.

இப்லீஸ் எச்சில் பட்ட மண்ணிலிருந்து நாய் படைக்கப்பட்டது.

இதனால் நாய் மனிதர்களை அண்மி வாழ்கின்றது .

ஜிப்ரீயல் (அலை) அவர்களின் கை பட்ட மண்ணில் நாய்ப் படைக்கப்பட்டதால் அது இரவில் தூங்காது பெரும்பாலும் விழித்திருக்கிறது.

இப்லீஸின் எச்சில் பட்டதால் அது மனிதர்களைக் கடிக்கிறது .


நாய் அனைத்துண்ணி பாலூட்டிவகையைச் சேர்ந்த ஒரு விலங்குஇனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ (DNA) க்களைக் கொண்டு 150,000 ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம் என எண்ண வாய்ப்பிருக்கின்றது என்பர்.

நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனாபோன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி, உணவாக உட்கொள்ளப்படுகிறது.


ரஹ்மத் ராஜகுமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக