பக்கங்கள்

சனி, 16 டிசம்பர், 2017

அற்புத கலிமா.



மனித வாழ்வில் ஏராளமான துன்பங்கள் கவலைகள் கஷ்டங்கள் வேதனைகள் என  நிறைய சூழ்ந்து இருக்கின்றது.

துன்பங்கள் தூசு போல பறந்து போக வேண்டுமா...?

மஃரிப் தொழுகைப்பிறகு கிப்லாவை முன்னோக்கி அமர்ந்து உள்ளத்தை ஓர்மைப்படுத்தி உங்கள் அனைத்து கஷ்டங்கள் துன்பங்கள் வேதனைகள் நாட்டங்கள் தேவைகள் அனைத்தயைும் மணக்கண்ணில்  நிறுத்தி 

இறைவா இவையனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் என நிய்யத் செய்து நாவை அசைக்காமல் கல்பால்(உள்ளத்தால்) தரூத் ஸலவாத் ஏழு விடுத்தம் ஓதி விட்டு 

حَسْبي اللّهُ وَنِعْمَ الْوَكِيلُ 
என்ற கலிமாவை மனதிலே நிறுத்தி கல்பால் ஒரு பத்து நிமிடம் திக்ரு செய்து விட்டு 

மீண்டும் ஏழு விடுத்தம்  ஸலவாத் ஓதி முடித்து துஆ செய்யுங்கள் அந்த கணமே இன்ஷா அல்லாஹ் உங்கள் மனதில் ஓர் ஆச்சரியமிக்க நிம்மதி கிடைக்கும்.

உங்களுக்கு அநீதம் இழைக்கபடும் போதும் 

நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் நெருக்கடி கொடுக்கபடும் போதும்

சோதனைகள் சூழும் போதும்
கஷ்டத்தில் சிக்கி இருக்கும் போதும் 

ஆபத்து கண் முன்னே நடக்கவிருக்கும் 

حَسْبي الله وَنِعْمَ الوَكِيلُ )

என் காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டேன் தூய கல்புடன் கூறுங்கள் 


அந்த சோதனை எல்லாம் பறந்து போகும் 
வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

இந்த கலிமாக்கள் சாதாரண கலிமா அல்ல

நபி இப்ராஹிம் அலை அவர்கள் நெருப்புக்கு முன் கூறிய கலிமா

உஹதுகளத்தில் அண்ணல் நபி கூறிய கலிமா 

அன்னை ஆயிஷா களங்கப்படுத்தப்பட்ட போது கூறிய கலிமா 
அனுபவத்தில் பலரை ஆச்சரியப்படுத்திய கலிமாவாகும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : ( إِذا وَقَعْتُمْ فِي الأَمْرِ العَظِيمِ فَقُولوا : حَسْبُنا الله وَنِعْمَ الوَكِيلُ )

எனவே உங்களுக்கு ஒர் முக்கியமான தேவை ஏற்பட்டால் அப்பொழுது இந்த கலிமாவை கூறுங்கள்

தேவைகள் நிறைவேற முன் பின் ஸலவாத் ஓதி இந்த துஆவை அதிகம் ஓதி வரவும் குறைந்தது ஒரு நாளைக்கு 313 ஓதுவது நமக்கு அது  நன்மை பயக்கும்.

எனவே என்றும் எங்கும் எப்போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடமே கையேந்தும் நல்லோர்களாக நம் அனைவரும் வாழ வல்லோன் அல்லாஹ் அருள் புரிவானாக. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக