பக்கங்கள்

புதன், 13 டிசம்பர், 2017

அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன்,

முதலில் இதை ஆசிரியர் படித்து கொண்டால் அந்த உரையாடல் நாடகம் எப்படி அமைக்கலாம் என்ற ஐடியா  (இன்ஷா அல்லாஹ்) கிடைக்கும்.


💞💞 உண்மைச் சம்பவம். 💞💞

♨ தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை.


♨ தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள் ? ? ? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று.

♨ ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்.

♨ ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள், அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்.

♨ பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள், அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்.

♨ மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்.

♨ அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது.

♨ அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது.

♨ இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்.

♨ இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை, நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.

♨ ஆம் அன்பான  பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது.

♨ எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்.

♨ அப்பாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகளின் வாழ்வு இனிமையாக அமையும்.


மகளின் பெயர். ஜன்னத்

தந்தையின் பெயர். சேக்.


சேக். மணி 6 ஆச்சி. இந்த ஜன்னத் எங்க...? மதரஸாவுக்கு போகாம என்ன செஞ்சிட்டு இருக்க... ஜன்னத்து.. ஜன்னத்து.......

ஜன்னத்து. வாப்பா.... இதோ இங்க இருக்கேன்.

சேக். மணி ஆறு ஆச்சி இன்னும் மதரஸா போகாம என்ன பண்ணுற....?

ஜன்னத்து. பல்லு விளக்கிட்டு இருந்தேன் வப்பா..

சேக். சரி... சரி... சீக்கிரம் கிளம்பு.

ஜன்னத்து. சரிப்பா.

சேக். மணி 8 டே கால் ஆச்சி இந்த ஜன்னத் மதரஸா விட்டு இன்னுமா வரல.... எங்க ஊர் சுத்தீட்டு இருக்கா...?

ஜன்னத்து. அஸ்ஸலாமு அலைக்கும்.

சேக். வ அலைக்கும் ஸலாம். ஏ லேட்டு.

ஜன்னத்து. இல்ல வாப்பா.... கதீஜா வீட்ல புதுசா ஒரு ஆட்டு குட்டி வாங்கிருக்காங்க பா. அதுக்கு பப்பீன்னு பேருலாம் வச்சிருக்காங்க பா.

சேக். சரி... சரி. சீக்கிரம் பள்ளிக்கூடம் கிளம்பு.

ஜன்னத்து. போங்க வாப்பா.. எப்போ பாத்தாலும் நீங்க என்னய திட்டிகிட்டே இருக்கீங்க. ரொம்ப கண்டிப்பா இருக்கீங்க.  கொஞ்சம் கூட என்னய சுதந்திரமா விட மாட்டேங்கிறீங்க. போ.

சேக். அடடா நம் இவளுக்கு நல்லது தானே சொன்னோம். இவ நல்லா இருக்கனும்னு தான இவ்ளே கண்டிப்பா இருக்கேன். ஆனா ஆத இவ புரிஞ்சிக்கலியே.... ம்ம்.... இத எப்படி அவளுக்கு புரிய வைக்கலாம்..

ஜன்னத்து. ஐ.... ஜாலி. பள்ளிக்கூடம் 3 days லீவு. நாளைக்கு நா பட்டம் விட்டு விளையாட போறேன்.

சேக்.  என்னோட ஜன்னத் செல்லம். பட்டமெல்லாம் எடுத்துகிட்டு எங்க கிளம்பீட்டீங்க.

ஜன்னத்து. மொட்டை மாடில  பட்டம் பறக்க விட போறேன். வாப்பா... வாப்பா.. ப்ளீஸ் வாப்பா. என் கூட வாங்க வாப்பா.

சேக். சரிடா செல்லம். வாங்க போலாம்.

ஜன்னத்து. வாப்பா அங்க பாருங்க. என்னோட பட்டம் எவ்ளோ அழகா மேல பறக்குது பாருங்க.

சேக். ஆமா wow.... ரொம்ப சூப்பரா இருக்கு.

ஜன்னத்து. ஐ.... ஜாலி.

சேக். ஜன்னத்து பட்டம் பறக்கும் போது எவ்ளோ அழகா இருக்கு.

ஜன்னத்து. ஆமா வாப்பா... ரொம்ப அழகா இருக்கு.

சேக். உன்னோட பட்டம் இன்னும் மேல் மேல பறக்க எது தடையா இருக்கு.

ஜன்னத்து. இந்த நூல் தான் வாப்பா.

சேக். அப்போ இந்த நூல அறுத்துட்டா....

ஜன்னத்து. அந்த பட்டம் ரொம்ப மேல போயி இன்னும் ஜாலியா பறக்கும் வாப்பா.

சேக். அப்போ இந்த நூல அறுத்துரலாமா...?

ஜன்னத்து. அறுங்க வாப்பா. அந்த பட்டம் இன்னும் ஜாலியா பறக்கட்டும்.

சேக். இதோ அறுத்துட்டேன்.

ஜன்னத்து. ஆஹா வாப்பா.....அந்த பட்டம் இன்னும் மேல போகுது பாருங்க.

டைவ் அடிக்கிது பாருங்க வாப்பா.....

வாப்பா இன்னும் மேல மேல போகுது வாப்பா...

தலய தலய ஆட்டுற மாதிரியே இருக்கு வாப்பா...

ஐயோ.... வாப்பா.. அந்த பட்டம் கீழ விழ போகுது.

ஐயோ.... வாப்பா அந்த பட்டம் கிழிஞ்சிருச்சி.

வால் கூட அருந்து போச்சி.

போச்சி போச்சி வாப்பா அங்க பாருங்க என்னோட பட்டம் முள்ளு மரத்து மேல விழுந்துருச்சி.

சேக். அழுகாத ஜன்னத்.

ஜன்னத்து. என் பட்டம் என்ன விட்டு போயிருச்சி வாப்பா.

சேக்.  அந்த பட்டம் இந்த நிலைக்கு ஆக என்ன காரணம்.

ஜன்னத்து. நீங்க நூல அறுத்து விட்டது தான்.

சேக். இதுல இருந்து என்ன புரியுது.

ஜன்னத்து. நூல விட்டு பட்டம் பறந்தா அந்த பட்டம் கிழிஞ்சிரும் வாப்பா.


♨ அப்பா  சேக் சொன்னார்.. மகளே இந்த நூல்  அந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து பல  உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது.

♨ இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாப்போடு உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்.

 இப்போது புரிந்திருப்பாய் நான் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதை.

ஜன்னத்து. ஸாரி வாப்பா. என்ன மன்னிச்சிருங்க.


( இப்போது இரு மாணவர்களும் ஒரே குரலில் சொல்ல கீழ் வரும் வாசகத்தை சொல்ல வேண்டும். )


♨ ஆம் அன்பான  பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது.

♨ எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்.

♨ அப்பாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் குழந்தைகளின் வாழ்வு இனிமையாக அமையும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக