பக்கங்கள்

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

இதுதான் தண்டனை என்றால்...!!




அமெரிக்க அதிபர் ஒருவர் வானுலகம் சென்றார்.. எமன் அவருக்கு தண்டனை விதித்து அதற்கான மூன்று தேர்வுகள் கொடுத்து எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க சொன்னான்..


முதல் அறையைத் திறந்து காட்ட, ஹிட்லரை சவுக்கால் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.. அதிபர் தன்னால் அடி தாங்க முடியாது என்று சொல்ல அடுத்த கதவு திறக்கப் பட்டது.



அங்கு இடி-அமீனை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தார்கள்.. அதிபர் அதுவும் முடியாதென்று மறுக்க.. அடுத்த கதவு திறந்துகாட்டும் போது எமன் சொன்னான்..


இதற்கு உமக்கு அருகதையே இல்லை.. இருந்தாலும் மூன்றாவது சாய்ஸ் இதுதான்..  அங்கு காந்தி அவர்களுக்கு பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார்..


அதிபர் மிகுந்த சந்தோஷத்துடன் இதுதான் தண்டனை என்றால்...!! மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூற..?
..
..
..
..
எமன் எலிசபெத் டைலரிடம் சொன்னான்..


"அம்மையாரே.. நீங்கள் கிளம்புங்கள்.. உங்கள் தண்டனைக் காலம் முடிந்து விட்டது.. இனி அதிபர் பார்த்துக் கொள்வார்..!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக