பக்கங்கள்

சனி, 7 ஜூன், 2014

இருக்காதா பின்னே....!


எல்லா ராணுவத்திலும் ஷார்ப் சூட்டர் ( அதாவது குறி தவறாமல் சுடுபவர்கள் ) என்ற பிரிவினர் இருப்பார்கள் இவர்களது வேலை மறைந்திருந்து எதிர் தரப்பை சேர்ந்த முக்கியமானவர்களை சுட்டுதள்ளுவது.


இவர்கள் எதிரிகளிடம் சிக்கினால் கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் சுட்டு கொல்லப்படுவார்கள், சீனாவை சேர்ந்த ஷார்ப் சூட்டர் ஒருவன் இந்திய ராணுவத்திடம் மாட்டி கொண்டான். அவனை விசாரித்த இந்திய ஜெனரல் அவனிடம் முக்கியமான தகவல்களை கறந்தபின், அவனை சுட்டு கொல்லும் படி, ஒரு சீக்கிய சோல்ஜரிடம் ஒப்படைத்தார்.


அந்த சீக்கிய சோல்ஜர் அவனை சுட்டு கொல்வதற்கு பதிலாக அடித்து கொன்றார் அதை பார்த்த சார்ஜெண்ட் அந்த சீக்கிய சோல்ஜரிடம் கேட்டார் ஜெனரல் அவனை சுட்டு கொல்லச் சொன்னார் நீயோ அவனை அடித்து கொன்றாய். உனக்கு ஏன் அவன் மேல் அந்தளவுக்கு கோபம்.



அதற்கு அந்த சோல்ஜர் இருக்காதா பின்னே....! பாருங்க சார்ஜெண்ட் உங்களையே அவன் மூன்று தடவை சுட்டிருக்கான், மூன்று முறையும் குறி தவறி இருக்கு என்றால் அவனை சும்மா விடலாமா...?”

2 கருத்துகள்:

  1. சுடுவதையே தொழிலாக கொண்டவர்களை இப்படித்தான் அடித்துக்கொள்ள வேண்டும் !

    பதிலளிநீக்கு
  2. நானும் குறி வைக்கிறேன்?

    பதிலளிநீக்கு