பக்கங்கள்

புதன், 23 அக்டோபர், 2013

நீதி சொல்லும் போதனைகள்!




Sweet Girl - islam photo

ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்,அப்பொழுது ஒரு மாணவர் தன் கையில் விரல் வைத்து கிறுக்கி கொண்டிருந்தார்.


இதைப்பார்த்த ஆசிரியர் கோபம் கொண்டு மாணவரை ஏசிவிட்டு பாட நேரத்தில் என்ன விளையாடிக்கொண்டிருக்கிறாய்?என விளக்கம் கேட்ட போது,

அந்த மாணவர் அழகான முறையில் ஆசிரியரே,தாங்கள் நடத்திய பாடத்தை விரலால் கையில் எழுதி மனனம் செய்துவிட்டேன் என்றார்.

இதைக்கேட்ட ஆசிரியர் அப்படியானால்,நான் நடத்திய பாடத்தை திரும்பச்சொல் என்றனர்.

உடனே மாணவர் அனைத்தையும் ஒரு பிழைகூட இல்லாமல் ஆசிரியரிடம் ஒப்பித்தனர்.

இதைப்பார்த்த அந்த ஆசிரியர் கையில் விரல் கொண்டு விளையாடிக் கொண்டிருந்ததாக கருதப்பட்ட மாணவரின் அறிவுத்திறமையை வெகுவாகப் பாராட்டினார்கள்.

வரலாற்று சிறப்புமிக்க அந்த ஆசிரியரின் பெயர்;இமாம் மாலிக்(ரஹ்).

வரலாற்று சிறப்புமிக்க அந்த மாணவரின் பெயர்;இமாம் ஷாபி ஈ(ரஹ்)

நீதி;இந்த மாமேதைகளின் சட்ட நூல்களில் குறை காண துடிக்கும் அரைகுறைகள் சிந்திக்கட்டும்!


மன்னர் ஹாரூன் ரஷீத் பாதுஷா அவர்கள் ஒரு நாள் தன் பற்கள் அனைத்தும் தன் கையில் இருப்பது போல் கனவு கண்டார்கள்.

இக்கனவின் பலனை தெரிந்து கொள்வதற்காக அரசவை புலவர்களை அழைத்து விபரம் கேட்டார்கள்.

அதற்கு முதலாவது புலவர் மன்னரை நோக்கி கூடிய விரைவில் உங்களைத்தவிர உங்கள் குடும்பத்தார்கள் அனைவரும் மரணித்து விடுவார்கள் என்று கூறினார்.

இதைக்கேட்டதும் மன்னர் கடும் சினம் கொண்டு அந்தப்புலவருக்கு தண்டனை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

பிறகு அடுத்த புலவரை அழைத்து நீர் கூறும் என்றார்கள்,

அதற்கு இரண்டாவது புலவர் மன்னரே உங்கள் குடும்பத்திலேயே தாங்களுக்கு மட்டும்தான் ஆயுள் அதிகம் என்று சொன்னார்.

இப்பதிலை கேட்ட மன்னர் மிகவும் சந்தோஷமடைந்து அப்புலவருக்கு பொன்னும்,பொருளும் கொடுத்து கௌரவித்தார்!

நீதி;இடம்,பொருள்,ஏவல் பார்த்து பேசப்பழகி கொள்ள வேண்டும்.

படித்ததில் பிடித்தது.                      
                                                                         கீழை ஜஹாங்கீர் அரூஸி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக