பக்கங்கள்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ஹஜருல் அஸ்வத்


ஹஜருல் அஸ்வத்

இதன் பொருள் 'கருப்புக்கல்' என்பதாகும்
.இது கருஞ்சிவப்பு நிறமாக இருந்தது.அரைவட்ட வடிவில்உள்ள இது ஆறு அங்குல உயரமும்,எட்டு அங்குல அகலமும் உள்ளதாகும்.இது தண்ணீரில்மிதக்கும் தன்மை உடையதாகும்."வானத்திலிருந்து ஆதம் நபி (அலை) அவர்கள்இதைக்கொண்டுவந்தனர்.அப்பொழுது அது பாலை விட வெண்மையாக இருந்தது.ஆதமுடையமக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறிஉள்ளார்கள்(ஆதாரம் திர்மிதி)

இந்தக்கல் ஒளி வீசக்கூடியதாக இருந்தது என்று அது ஒளி பாய்ந்த இடங்கள் வரை புனிதபூமி(ஹரம்) என்று நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தின் போது இது அபுகுபைஸ்மலையில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

இப்ராஹீம் (அலை)அவர்கள் கஃபாவை கட்டிய பொழுது ,ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதனைகஃபாவின் தென் கிழக்கு மூலையில் பதித்தார்கள்.அது கஃபாவை தவாஃப் செய்வதற்கு துவக்கஇடமாக ஆக்கப்பட்டுள்ளது.

பிறகு பனூ ஜர்ஹம் கூட்டத்தார் மக்காவை காலி செய்த பொழுது இதை ஜம்ஜம் கிணற்றுக்குள்போட்டு புதைத்து விட்டு சென்றனர்.பின்னர் நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப்அவர்கள் ஜம்ஜம் கிணற்றைத் தோண்டும் பொழுது இதனை கண்டு பிடித்து எடுத்து கஃபாவில்இதற்குறிய மூலையில் பதித்தார்கள்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு 35 வயதானபொழுது கஃபா புனர் நிர்மானம் செய்யப்பட்ட சமயம்இந்தக்கல்லை அதற்குறிய இடத்தில் எடுத்து வைக்கும் சிறப்பு நபி(ஸல்) அவர்களுக்கேகிடைத்தது.ஹிஜ்ரி 64 இல் ஏற்பட்ட நெருப்பால் இது மூன்று துண்டுகளாக உடைந்தது.அதை இபுனுஜுபைர்(ரலி)அவர்கள் வெள்ளிக்கம்பியால் பிணைத்து இதற்குறிய இடத்தில் பிணைத்தனர்.

நபி(ஸல்) அவர்கள் இதனை முத்தமிட்டுள்ளார்கள்.மேலும் ஒட்டகத்தின் மேல் இருந்தவாறு தம்கைத்தடியால் தொட்டு கைத்தடியின் நுனியை முத்தமிட்டுள்ளார்கள்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீதீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதைக்காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். (அறிவிப்பாளர்:ஆபிஸ் இப்னு ரபீஆ)
ஹாஜிகள் அதனை முத்தமிடுவது சுன்னத்.எனினும் கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுதுமற்றவர்களைத் தள்ளி முண்டியடித்துச் செல்வது கூடாது.கூட்ட நேரத்தில் அதன் பக்கம் கையைகாட்டி அதனை முத்தமிடுவது சிறந்ததாகும்

கேள்வி : விக்கிரக ஆராதனையை எதிர்க்கும் முஸ்லிம்கள் காஃபாவிலுள்ள கருப்பக்கல்லைபுனிதமாக கருதுவதேன்?

பதில் : காஃபாவிலுள்ள எந்தவொரு கல்லையும் முஸ்லிம்கள் வணங்கவோ, புனிதப்படுத்தவோசெய்வதில்லை. ஹஜ் உம்ரா வணக்க வழிபாட்டின்போது இடையே முஸ்லிம்கள் முத்தமிடும் கல்ஹஜருல் அஸ்வத் ஆகும்.

வரலாற்றில் எந்தவொரு காலகட்டத்திலும் வணக்கத்திற்குறியதகா ஆக்கப்படாத ஒரு கல்லாகும்அது. காஃபாவினுள் 360 சிலைகள் வணக்கத்திற்குரியதாக இருந்த காலகட்டதிலும் கூட ஹஜருல்அஸ்வத் வணக்கத்திற்குரியதாக கருதப்பட்டதுமில்லை ஆக்கப்பட்டதுமில்லை.

உலகத்தில் வணங்கப்படும் எந்தவொரு கல்லும்அதன் உண்மைப் பெயரில் அறியப்படுவதில்லை.சிவலிங்கம் சிமெண்டில் செய்யப்பட்டிருந்தால் சிமண்ட்லிங்கம் என்ற கூறுவார்களா? மண்கொண்டுஎசக்கி அம்மன் சிலை உருவாக்கப்பட்டிருந்தால் மண் அம்மன் என்று கூறுவார்களா? மாட்டார்கள்.அந்த சிலைகள் எந்த கடவுள் பெயரில் வடித்து வைக்கப்டடள்ளதோ அந்த கடவுள் சிலை என்றுதான் கூறுவர்களே தவிர கல்சிலை. மண்சிலை, வெண்கல சிலை என்று கூறுவதில்லை. ஆனால்கஃபாவின் கருப்பு கல்லை. 'ஹஜருல் அஸ்வத்' (ஹஜர் - கல், அஸ்வத் - கருப்பு) என்று தான்அழைக்கப்படுகிறது.



ஹஜருல் அஜ்வத்தை யாராவது புனிதமாக வணக்கத்திற்குரியதாக கருதுவராயின் அவர்உண்மை முஸ்லிம் அல்ல என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு.
பின் எதற்காக ஹஜருல் அஸ்வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றால் கஃபாவைதவாப் என்னும் வழிபாட்டிற்காக சுற்றி வருவதற்காக ஒரு துவக்க அடையாளமாக கருதப்படுகிறது.ஓட்டப்பந்தயம் வைக்கும் போது துவக்க இட அடையாளத்திறகு ஏதாவது ஒரு அடையாளத்தைக்குறிப்பிடுவது போல கஃபாவை சுற்றிவர ஒரு துவக்க ஆடையாளமாகவே ஹஜருல் அஜ்வத்கருதப்படுகிறது.


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அந்த கல்லை முத்தமிட்டதால் முஸ்லிம்களும் அதைமுத்தமிடுகிறார்கள். உலகத்திலுள்ள பொருள்களிலே சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்டது என்கிறசிறப்பும், நபி (ஸல்) அவர்கள், கஃபா புனர் நிர்மானத்தின் போது அதை தங்கள் கையில் தூக்கிப்பொருத்தினார்கள் என்கிற சிறப்பும் அதற்கு இருக்கிறது. மற்றபடி அந்த கல்லை முத்தமிடவேண்டும் என்கிற கட்டாயக் கடமை ஏதும் இல்லை. நபி (ஸல்) அவர்களின் முகடகியததோழர்களில் ஒருவரான உமர் (ரலி) அவர்கள் அநத கல்லை முத்தமிட்டு, ' கருப்புக்கல்லே உனக்குஎந்தவொரு சக்தியும் இல்லை. எனினும் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டிருக்காவிட்டால் நர்னஉன்னை முத்தமிட்டிருக்கவே மாட்டேன் என்றே கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இந்தமுத்தமிடுதலானது ஒரு வகை அன்பினால் இடும் முத்தமேயாகும். அச்சத்துடனோ,பக்தியுடனோ இடும் முத்தம் அல்ல. கணவன் மனைவியை முத்தமிட்டால், பெற்றோர்கள்
குழந்தையை முத்தமிட்டால் அது வணக்கமாக புனிதமாக கருத முடியுமா? அப்படியிருக்ககருப்புக்கல்லை முத்தமிடுவது வணக்கமாக கருதிக் கொள்வது ஏற்புடையதல்ல.இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறும் எவரும் எதுவும் வணக்கத்திற்குரியதல்ல



உமர் ரளியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ....தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு kalல்தான் stone)என்பதை நான் நன்கறிவேன். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதைக்காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். (அறிவிப்பாளர்:ஆபிஸ் இப்னு ரபீஆ)



பிறகு 'நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்ததுநம்முடைய பலத்தை முஷ்ரிகீன்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ்அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?' எனக் கூறிவிட்டு, 'எனினும், இதை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள். அதனைவிட்டுவிட நாம்விரும்பவில்லை' எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அஸ்லம்)


''நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப்பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதைவிட்டதில்லை.''


 ''இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவ்விரு மூலைகளுக்கிடையே நடந்து செல்வாரா?' எனநாஃபிஉ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்டபோது, 'முத்தமிடுவதற்கு எளிதாகஇருக்கும் என்பதற்காக நடந்துதான் செல்வார்' எனக் கூறினார்'' என்று உபைதுல்லாஹ்



கஅபா என்பது ஒரு சதுர வடிவ கட்டிடம். அதனுள் மூறு தூண்கள் உள்ளன. பழங்காழ சில விளக்குகளும் உள்ளன. அதனுள் எந்த சிலையும் இல்லை. ஆம் நபிகள் நாயகத்தின் மக்கா வெற்ற்க்கு முன்பு வரை அதில் பல சிலைகள் இருந்தன. மக்கா வெற்றிக்குப் பின்னர் அவையனைத்தும் அகற்றப் பட்டு படைத்தவன் ஒருவனே வணங்கத் தகுந்தவன், ஏனைய படைப்புகள் அனைத்தும் அவனின் அடிமைகளே என்ற உயரிய கோட்பாடு நிலை நிறுத்தப் பட்டது.




தற்போது தங்கள் கூறும் கருப்புக் கல்லுக்கு வருவோம். அந்தக் கல் “ஹஸ்ருல் அஸ்வத்” என்று அரபியில் அழைக்கப்படும். இது கஅபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் கஅபாவை சுற்றி வலம் வரும்போது அதன் அருகில் வரும்போது  அதனை முத்தமிடுவர். கூட்டம் அதிகம் எனில் அதனை நோக்கி கையை உயர்த்தி சைகை செய்வர். நாங்கள் இவ்வாறு செய்வதன் காரணம் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள். இறைவன் எங்களுக்கு அந்த இறுதித் தூதரே அப்படியே பின்ப|ற்ற இறுதி வேதமாம் குர்ஆனில் கூறியிருக்கின்றான். அவ்வாறே இன்றளவும் இதனை நாங்கள் செய்து வருகின்றோம்.


தங்கள் எழுப்பிய கேள்வி போன்று சிலர் கேள்வி எழுப்புவார்கள் என்பதற்காகத்தானோ என்னவோ,இஸ்லாத்தின் இரண்டாம் கலீபாவான உமர் (ரலி) அவர்கள் இதனை செய்யும் போது இப்படி கூறியே செய்தார்கள். “நீ ஒரு கல் உனக்கு எந்த சக்தியுமில்லை! இறைவன் தூதர் உன்னை முத்தமிடக் கண்டேன் அதன் காரணமாகத்தான் நானும் முத்தமிடுகின்றேன்!”


இன்று இந்தக் கல்லும் முழுமையாக இல்லை. இடையில் நடந்த ஒரு போரில் அந்த கல் உடைக்கப்பட்டது. தற்போது அந்தக் கல்லின் எட்டு சிறு பாகங்கள் தான் உள்ளது, (படத்தைப் பார்க்க).


முஸ்லீம்கள் கஅபாவையும் வணங்கவில்லை. அந்தக் கருப்புக் கல்லையும் வணங்கவில்லை. முஸ்லீம்கள் கஅபா இருக்கும் திசையை நோக்கி தொழுகின்றனர். இது ஒருமுகப்படுத்துவதற்காக இறைவனால் செய்யப்பட்ட ஏற்பாடேயன்றி நாங்கள் எந்த திசையையும் வணங்கவில்லை. இதனைப் பற்றி பார்ப்போம்.


சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவனின் இறுதித் தூதர் மனிதர்களை ஏக இறைவனின் பால் அழைத்தார். அவரின் ஏற்பை ஏற்று இறைவனை ஏற்றுக் கொண்ட மக்கள் தொழுகையும் நிலை நிறுத்தினர். இறைத்தூதருன் முதலில் அவர்கள் எந்த திசையை நோக்கி தொழுதார்கள் தெரியுமா? கஅபாவை நோக்கியல்ல! மாறாக பைத்துஸ்ஸலாம் என்றழைக்கப்படும் முஸ்லீம்களிடத்தில் மூன்றாவது புண்ணியஸ்தலமாக (மக்கா மதினாவிற்குப் பிறகு.) கருதப்படும் பள்ளிவாசல் இருக்கும் திசையை நோக்கி. அதாவது ஜெருஸலத்தை நோக்கி.

இறைத்தூதரிடம் நாம் தொழும் திசை கஅபாவை நோக்கி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இருந்துவந்தது, எந்த ரகசியமும், எந்த எண்ணமும் எவனிடமிருந்து மறைய முடியாதோ அந்த இறைவன் ஒருநாள் தனது தூதரின் விருப்பத்திற்கு அனுமதியளித்தான். அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லீம்கள் கஅபாவை நோக்கி தொழுது வருகின்றனர்.
ஆகா! தங்களைப் போன்றவர்களுக்கு பதில் அளிப்பது போன்றல்லவோ படைத்தவன் இதனைப் பற்றி பின்வரும் வசனங்களில் பேசுகின்றான்…
(இதனைப் பற்றி கூறும் இறைவசனங்கள்: அத்தியாயம் 2; வசனங்கள்: 142-150)

2:142(நபியே! "முஸ்லிம்கள் முன்னர்முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத்திருப்பிவிட்டது எது?" என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்குநீங்கள் கூறுங்கள்: "கிழக்குத் திசையும் மேற்குத் திசையும்அல்லாஹ்வுக்குரியதேஅவன் விரும்புபவர்களை நேரான வழியில் செலுத்துவான்."


2:143(நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்றநடுநிலையானவகுப்பினராகவும் நாம் உங்களை ஆக்கினோம்ஆகவேநீங்கள் (மற்றமனிதர்களுக்கு(வழிகாட்டக் கூடியசாட்சிகளாக இருங்கள். (நம்முடையதூதர் உங்களுக்கு (வழி காட்டக்கூடியசாட்சியாக இருப்பார். (நபியே!) நீங்கள் (இதுவரை முன்நோக்கித் தொழுதுகொண்டு)இருந்த (பைத்துல் முகத்தஸின்திசையை (மாற்றாமல் நீங்கள் அதையே நோக்கித்தொழுது வரும்படி இதுவரைநாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின்நம்தூதரைப் பின்பற்றுபவர் யார்பின்பற்றாது தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு)திரும்பி(ச் சென்றுவிடுகிறவர் யார்என்பதை நாம் அறி(வித்து விடு)வதற்காகத்தான்.ஆனால் எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகின்றானோ அவர்களைத் தவிரமற்றவர்களுக்கு (வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும்.தவிர, (நம்பிக்கையாளர்களேஇதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித்தொழுது வந்தஉங்களுடைய நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான்.நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகக் கருணையாளன்நிகரற்ற அன்புடையவன்.


2:144(நபியே!) உங்களுடைய முகம் (பிரார்த்தனை செய்துஅடிக்கடி வானத்தைநோக்குவதை நாம் காண்கிறோம்ஆதலால்நீங்கள் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின்பக்கமே நாம் உங்களை நிச்சயமாகத் திருப்புகின்றோம்எனவேநீங்கள் (தொழும்போதுமக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்தபோதிலும் (தொழுகையில்அதன் பக்கமேஉங்களுடைய முகங்களைத் திருப்புங்கள்வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும்,கிறிஸ்த)வர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) "இது தங்கள்இறைவனிடமிருந்(து வந்) உண்மை(யான உத்தரவு)தான்என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால்அவ்வாறே அவர்களுடைய வேதத்தில் இருக்கின்றதுஎனவேஉண்மையைமறைக்கும்அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.


2:145ஆகவே (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட அவர்களுக்குத் (திருப்தியளிப்பதற்காக)அத்தாட்சிகள் அனைத்தையும் நீங்கள் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உங்களுடையகிப்லாவைப் பின்பற்றப் போவதில்லைநீங்களும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப்போவதில்லைஅன்றி (வேதம் கொடுக்கப்பட்டஅவர்களிலும் ஒருவர் மற்றொருவரின்கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால்மக்காவை நோக்கித் தொழும்படி)உங்களுக்கு வஹ்யி(யின் மூலம் உத்தரவுவந்ததன் பின்னும் அவர்களுடையவிருப்பங்களை நீங்கள் பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்களும் அநியாயக்கரர்களில்உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்கள்).


2:146எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் தங்கள்பிள்ளைகளை(ச் சந்தேகமறஅறிவதைப் போல் (ந்த மக்காவின் திசையளவில் நீங்கள்திரும்பித் தொழுவீ ரென்ப)தை அறிவார்கள்ஆனால்அதிலொரு பிரிவினர் நிச்சயமாகநன்கறிந்து கொண்டே (இந்தஉண்மையை மறைக்கின்றனர்.


2:147(நபியேகிப்லாவைப் பற்றிஉங்கள் இறைவனிடமிருந்து வந்த இதுதான்உண்மை(யான கட்டளை.) ஆதலால்நீங்கள் சந்தேகிப்பவர்களில் ஒருவராக ஒரு சிறிதும்ஆகிவிட வேண்டாம்.


2:148(நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு.அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல)நன்மையானவைகளை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள்நீங்கள்எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்நிச்சயமாகஅல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.


2:149ஆகவே (நபியே!) நீங்கள் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள்நிச்சயமாகஇதுதான் உங்கள் இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும். (ஆகவே,இதனைப்பற்றி வீண் தர்க்கம் செய்பவர்களே!) உங்களுடைய செயலைப்பற்றி அல்லாஹ்பராமுகமாயில்லை.


2:150அன்றி, (நபியே!) நீங்கள் எங்குச் சென்றாலும் தொழும் போது) "மஸ்ஜிதுல் ஹராமின்"பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) அவர்களில்வரம்பு மீறியவர் களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் (வீண்விவாதம் செய்ய எந்தஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக நீங்களும் எங்கிருந்த போதிலும் "அல் மஸ்ஜிதுல்ஹராமின்பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள்அன்றிஅவர்களுக்கு நீங்கள்பயப்பட வேண்டாம்எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின்மூலம்என்னுடைய அருட்கொடையை நான் உங்கள்மீது முழுமையாக்கி வைப்பேன். (அதனால்நிச்சயமாக நீங்கள் நேரான வழியை அடைவீர்கள்.

ஒரு கவிஞர் அழகாகப் பாடுவார் … இறைவன் கூறுவதாக!
கஅபாவிலும் நானில்லை என்றான்!கல்லுக்குள்ளும் நானில்லை என்றான்!கஅபாவின் நாயகன் எனையே!கல்புக்குள்ளே* தேடு என்றான்!.
(*கல்பு(b) என்றால் அரபியில் இதயம் என்று பொருள்.)
எங்களது வணக்கம் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே. உதாரணத்திற்கு…
ஒரு முஸ்லீம் பயணத்தில் இருக்கின்றார். தொழும் நேரம் வருகிறது. கஅபாவின் திசை எது என்று நிச்சயமாக தெரியவில்லையெனில் எந்த திசையையும் நோக்கித் தொழலாம். எந்த நிலையிலும் ஒரு முஸ்லீமிற்கு தொழுகையைவிட அனுமதியில்லை. வாகனத்தில் பிரயாணம் (e..g. பஸ், ரயில் ) செய்யும் போது தொழுகை ஆரம்பிற்கும் கஅபா இருக்கும் திசையை நோக்கி ஆரம்பம் செய்ய வேண்டும். அதன் பின்னை வாகனம் எந்த திசையில் திரும்பினாலும் அதனைப் பற்றி பிரச்சினையில்லை. இதனை மிக அழகாக இறைவன் குர்ஆனில் கூறுவான்.(2:115, 177)


...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக