பக்கங்கள்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

சிறந்த செல்வம்



ஓரு சீடன் வாரச்சந்தையில் தன் குருவிடம் கேட்டான் இங்கு நிறைய பேர் தங்கள் பொருள்களை கூவிக் கூவி விற்க்கிறார்களே வாங்குகிறவர்களுக்கு குழப்பம் ஏற்ப்படாதா...?


குரு எல்லா ஓசைகளும் இங்கு ஓலித்தாலும் யாருக்கு எந்த பொருள் வேண்டுமோ அதைக் கூவி விற்கிற ஓசை மட்டும் தான் அவர்கள் காதில் விழும். கோழி வாங்க வந்திருப்பவனின் காதுகளில் கோழி விற்பவன் கூவி விற்ப்பதே கேட்கும். குதிரையை தேடுபவன் செவிகளில் குதிரை வியாபாரியின் ஏலமே விழும் என்று விளக்கம் அளித்தார்.


சீடன் அதை நம்பவில்லை. உடனே குரு இங்கே பாருங்கள் எனறு செல்லி தன்னிடமிருந்த நாணயத்தைக் கீழே போட்டார். அந்த நாணயம் கீழே விழுந்ததும்  எழுந்த சத்தத்தில் இருவர் மாத்திரம் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். குரு பார்த்தாயா இந்த சந்தடியிலும் காசின் மீது மட்டுமே பிடிப்பு இருப்பவர்கள் இந்த ஓலியை கவனித்துவிட்டார்கள். என்று சீடனுக்கு புரிய வைத்தார் நம்மைச் சுற்றிப் பல ஓலிகள் விரவி இருக்கின்றன பறவைகளை விரும்புகிறவர்களின் செவிகளில் அவற்றின் இசையே விழுகிறது. ஓன்று கேட்க விரும்புகிறவர்கள் காதில் பக்கத்து வீட்டு சண்டையே விழும்.


சரியாக கவனிக்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நாம் கேட்ப்பதை விட சிறந்த செய்தி சொல்வதற்க்கு இருப்பதாக நினைப்பது. கவனிக்க வேண்டிய காரணமில்லை என்று நினைப்பது. கவனத்தை தடுக்கும் குறுக்கீடுகள். சொல்பவரை நமக்கு பிடிக்காததால். நம் மனம் மூடி இருப்பதால். பேசுபவரின் தகவலை வடிகட்டி கேட்க்க வேண்டியதை மட்டுமே நாம் கேட்ப்பதால். முடிவுகளுக்கு தாவுவதால். நமது உரை வரும்போது என்ன பேசுவது என்று யோசிப்பதால். பேசுபரை நம் மனதுக்குள்ளேயே விமர்சிப்பதால்.


நம் மற்ற பொறிகளுக்கு எல்லைகள் உண்டு. கண்களை மூட இமைகளும், வாயை மூட இதழ்களும் உண்டு. ஆனால் காதை மூட மூடி எதுவும் இல்லை. உற்று கேட்பவர்களே உலக சாதனையாக போற்றப்படும் புதிய கண்டுபிடிப்புகளை அளித்திருக்கிறார்கள் என்பதை வரலாறு வாசித்தால் தெரிந்து கொள்ள முடியும்.


திருவள்ளுவர் செவிகளை சிறந்த செல்வம் என்று சொல்கிறார். எல்லாச் செல்வங்களைக் காட்டிலும் சிறந்தது கேள்வி. அடுத்தவர்கள் பல ஆண்டுகள் சிரமப்பட்டு சேகரித்ததை சில மணி நேரத்தில் அவர்களை கவனிப்பதன் மூலம் நாம் பெற்றுவிடுகிறோம்.



செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

1 கருத்து:

  1. தூக்கத்திற்கு ،கண் மூடியிருந்தால் மட்டும் போதாது !செவியும் மூடினால்தான் ஆழ்ந்த நித்திறை ஏற்படும் كالكهف

    பதிலளிநீக்கு