பக்கங்கள்

வெள்ளி, 18 ஜனவரி, 2013

அழகிய முன் மாதிரி



நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரஸுலிஹில் கரீம். அம்மா பஃத் பகத் கால ல்லாஹு தஆலா பில் குர்ஆனில் அழிம் வல் புர்கானில் மஜித்.  அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜிய்ம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  லகத் கான லகும் பி ரஸுலில்லாஹி உஸ்வதுன் ஹஸனா...


எல்லா புகழும் அல்லாஹ் ஓருவன் மீதே நிலவட்டுமாக......
நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் சத்திய சஹாபாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக என் உத்தம திருநபியின் உதயதின விழாவிற்க்கு இங்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் எனறென்றும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக......ஆமீன்.


கண்ணியத்திற்க்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே......
இந்த உலகத்தில் எத்தனையோ பல அறிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் அவரிகளின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் சிலர் வாழ்க்கை வரலாற்றில் இளமைப் பருவம் நனறாக இருந்தால் முதுமைப் பருவம் சரியாக இருப்பதில்லை. சிலரது முதுமைப் பருவம் நன்றாக இருந்தால் அவரது இளமைப் பருவம் சரியாக இருப்பதில்லை. ஆனால் இந்த உலகத்தில் அனைத்து பருவத்திலும் இந்த அகில உலக மக்களுக்கு பல படிப்பினை தரும் விதத்தில் வாழ்ந்த ஓரு மனிதர் இருக்கிறார் என்றால் அது நமது அண்ணலம் பெருமானார் நபி ஸல் அவர்களைத் தவிர வேறு யாராகவும இருக்க முடியாது.

கண்ணியத்திற்க்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே......

நபி ஸல் அவர்களின் வரலாற்றில் குழந்தை பருவமாக இருந்தாலும் சரி. இளமைப் பருவமாக இருந்தாலும் சரி. முதுமைப் பருவமாக இருந்தாலும் சரி. அனைத்து பக்கங்களும் படிப்பினை தரும் விதத்தில் அமைந்துள்ளது.
அதுமட்டுமல்ல நபி ஸல் அவர்களின் சொல்லும் சரி. செயலும் சரி. முழுக்க முழுக்க அல்லாஹ் எப்படி வாழச் சொன்னானோ அப்படி அமைந்திருந்த்து.
நபியின் சொல்லைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது வமா யன்திகு அனில் ஹவா. இன்ஹுவ இல்லா வஹ்யிய் யுவ்ஹா.  மாநபி ஸல் அவர்கள் தன் சொந்த மனோ இச்சையின் படி பேசவில்லை. இன்ஹுவ இல்லா வஹ்யிய் யுவ்ஹா. அவர் பேசுவதெல்லாம் வஹி இறைச் செய்தியே....என நபி ஸல் அவர்களின் சொல்லைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

கண்ணியத்திற்க்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே......

அதுமட்டுமல்ல நபி ஸல் அவர்களின் செயலைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது வமாதஷாவூன இல்லா அய் யஷாஅல்லாஹ். நபி ஸல் அவர்கள் தன் சொந்த மனோ இஷ்டப்படி செயல்படுவதில்லை. அல்லாஹ் எப்படி செயல்பட கூறுகிறானோ அதன்படி அவர் செயல்படுகிறார் என நபியின் செயலைப் பற்றிக் கூறுகிறான்.

ஆக இப்படி நபி ஸல் அவர்களின் சொல்லாக இருந்தாலும் சரி செயலாக இருந்தாலும் அனைத்துமே அல்லாஹ் காட்டிய பாதையில் முழுக்க முழுக்க அமைந்திருப்பதால் தான் அல்லாஹ் உலக மக்களை நோக்கி  லகத் கான லகும் பி ரஸுலில்லாஹி உஸ்வதுன் ஹஸனா. அண்ணலம் பெருமானார் நபி ஸல் அவர்களிடம் ஓரு அழகிய முன் மாதிரி உள்ளது. நி இந்த உலகில் எனக்கு பிடித்தமான முறையில் வாழ வேண்டும் என்றால் அவர்களை போல வாழு என அல்லாஹ் கூறுகிறான்.

என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே......

இந்த உலகத்தில் பிறந்த ஓரு மனிதரின் நடையைப் பற்றி. உடையைப் பற்றி. அவரின் சொல்லைப் பற்றி. செயலைப் பற்றி. அவர் சிரிப்பைப் பற்றி அவர் கோபத்தைப் பற்றி அவர் குடும்பத்தைப் பற்றி அவர் பழக்க வழக்கத்தைப் பற்றி இப்படி எதைப் பற்றி நாம் பேசினாலும் நமக்கு நனமை கிடைக்கும் விதத்தில் வாழ்ந்த ஓரு மனிதர் அவர் மனிதரல்ல மனித புனிதர் என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஓருவர் இருக்கிறார் என்றால் அது நமது மாநபி ஸல் அவர் ஓருவராகத் தான் இருக்க முடியும். 

எனவே அப்படிப் பட்ட நபி ஸல் அவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதைத் தெரிந்து புரிந்து அதன்படி வாழக் கூடிய நல்லடியார்களாக நம் அனைவர்களையும் அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக...............ஆமீன்.

1 கருத்து: