பக்கங்கள்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

தாயன்பு சித்திரம்.



நேரம்.
நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் மாலை பொழுது.

பங்கேற்ப்பாளர்கள்.
வயதான அம்மா, கணவன், மனைவி, மகன், கணவனின் தங்கச்சி,  இஸ்ராயீல்.


சபரா.   (இருமல் சப்தம்)  வெளியில நல்ல மழை பெய்யுது. கரண்ட் வேற இல்ல. இந்த கண்ணாடிய வேற காணும்.

           (காலிங் பெல் சப்தம்.)

                        (யாரு.......யாருப்பா அது.....) 

அஸ்லாம். டென்சனாக.......நான் தான் மா....

சபரா. வாப்பா....தல ஈரமா இருக்கு. இந்தா துண்டு தலைய தொடச்சிக்கோ.

அஸ்லாம். வேணாம்......நான் எடுத்துகிட்டேன்.

சபரா. ஏம்பா.....இந்த மாசம் B.P. செக் பண்ண போகனும்பா. இருமல் வேற அதிகமா இருக்கு. இந்த கண்ணாடிய வேற மாத்தனும்.

அஸ்லாம். ம்மா...போமா. நி வேற. வந்ததுமே நொய்யு.... நொய்யுன்னு     போமா......போய் அந் மூலைல கட.

சபரா.  (இருமல் சப்ததுடன்....)

அஸ்லாம். எங்க யாரையும் கானும்.

                 சித்திகா..........சித்திகா........

சித்திகா. . என்னங்க........... எப்பங்க வந்திங்க..

அஸ்லாம். நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது. ஆமா....நீ எங்க போய்ட்டு  வர்ர

சித்திகா.. இல்லங்க.....நம்ம வீட்ல கரண்ட் இல்ல அதான்.... பக்கத்து வீட்ல      போய் மானாட மயிலாட  பார்த்துட்டு வந்தேன். ஆமா...ஏங்க உங்க முகம் இப்படி வாடிப் போய் இருக்கு அதுவும் இல்லாம ஆபிஸ் ல இருந்து வேற சீக்கிரம் வந்துட்டிங்க.

                  (இருமல் சப்தம்.)

அஸ்லாம். இல்லடா...தல ரொம்ப வலிக்குது. அதான். பர்மிசன்ல வந்துட்டேன்.

சித்திகா. என்ன சொல்லுறீங்க...வாங்க  ஆஸ்பத்திரிக்கு போலாம்.

அஸ்லாம்.  அட எனக்கு  ஓன்னும் இல்ல. நி எதுக்கு பதற்ற எனக்கு ஓன்னும் ஆகல.

சித்திகா. ஏங்க உங்களுக்கு ஓன்னுன்னா அத என்னல தாங்க முடியாதுங்க. உங்களுக்கு ஏதாச்சும்னா என் உயிர குடுத்தாவது நான் உங்கள காப்பாத்துவேஙக.

அஸலாம். இப்ப எதுக்கு பெரிய பெரிய வார்த்தயெல்லாம் பேசுற சரி விடு.

ஹாதிப். ஹாய் டாட்

               (இருமல் சப்தம்.)

அஸ்லாம். டேய் ஸ்கூல் விட்டு எவ்ளோ நேரம் ஆகுது. இவ்ளோ நேரம் எங்க போய்ட்டு வர்ர....

ஹாதிப். இல்ல  டாட் என்னோட பிரண்ட் பர்த்டே பார்ட்டிக்கு என்ன இன்வைட் பண்ணி இருந்தான். அதான் போய்ட்டு வந்தேன்.

அஸ்லாம். டேய் நல்லா படிக்கனும்டா. படிச்சா தான் எங்கல நல்லா பாத்துக்க முடியும்.  கடைசி காலத்துல நீ எங்கல பாத்துக்குவியாடா...

ஹாதிப். கவலப் படாதிங்க டாட் எந்த கஷ்டமும் வராம உங்கள என் உயிர் கொடுத்தாவது பாத்துக்குவேன்.

அஸ்லாம். வெரி குட்.  நல்ல பையன் சரி போய் டிரஸ் மாத்திக்கோ.

                 (இருமல் சப்தம்.)

சித்திக்கா. ஏங்க சொல்ல மறந்துட்டேன் ஊர்ல இருந்து உங்க தங்கச்சி வந்திருக்காங்க.

அஸ்லாம். எங்க காணும்....

சித்திககா நானும் அவளும் தான் TV பார்க்க போனோமே......இதோ அவளே வந்துட்டா.

பாஹிமா. அஸ்ஸலாமு அலைக்கும் னா....

அஸ்லாம். வா அலைக்கும் ஸலாம் என்னமா திடிர்னு இந்த பக்கம்.

பாஹிமா இல்லண்ணா.....இந்த மாசம் அவருக்கு ஆபிஸ் ல சம்பளம் லேட்டாயிருச்சி..... புள்ளங்களுக்கு வேற  பீஸ் கட்டனும். அதான் உங்க்கிட்ட ஓரு 5000 ரூபாய் வாங்கிட்டு போலாம்னு....

அஸ்லாம். சரி காலைல வாங்கிக்கோ...

பாஹிமா. ன்னே.......பணம் கேட்கிறேன்னு தப்பா நினச்சுக்காத....

                    (இருமல் சப்தம்.)

அஸ்லாம். ச்சே......ச்சே....அப்படியெல்லாம் ஓன்னும் இல்லமா....உனக்கு ஓன்னுனா நான் பார்க்கிறேன்... அது மாரி எனக்கு ஓன்னுன்னா நீ பார்க்க மாட்டியா....

பஹிமா. ஐயோ.....என்னன்ன இப்படி சொல்லிட்ட உன்க்கு ஓன்னுன்ன என் உயிர கூட கொடுப்பேன்.

அஸ்லாம். சரி...சரி விடுமா  வா சாப்டலாம்.

           சித்திக்கா....மணி 9 ஆக போகுது. சாப்பாடு எடுத்து வைமா...

               (இருமல் சப்தம்.)


அஸ்லாம். ஹாதிப். மணி 10 அரையாக போகுது. போ....போய் தூங்கு.

அஸ்லாம். என்ன மணி 1. ஆகுது இன்னும் தூக்கம் வரல...ச்சே மழை வேற       இப்படி பேயுது.....

                      (கதவைத் தட்டும் சப்தம்.....)

அஸ்லாம். இந்த நேரத்துல யாரு கதவ தட்டுறா.....யாரு.....யாருப்பா அது..
                                (மீண்டும் கதவ தட்டும் சப்தம்.)

அஸ்லாம்.  யாருங்க....யாரு வேனும்.

அன்சாரி. நான் தான் இஸ்ராயீல்.....உன் உயிர கைப்ப்ற்ற வந்திருக்கிறேன்.

அஸ்லாம். என்னது என் உயிரய..... நல்லா பாருங்க அட்ரஸ் மாத்தி கீத்தி வந்திருக்க போறீங்க..

                                               (மீண்டும் கதவை தட்டும் சப்தம்.)

அன்சாரி. இல்ல உன் உயிரத் தான் எடுக்க வந்திருக்கிறேன்.

அஸ்லாம். என்னது என் உயிரயா..  ஐயோ...வேனாம் என்ன விட்ருஙக. 
நான் இப்ப தான்  லைப் ல செட்டில் ஆகியிருக்கேன்.  நான் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு என்ன விட்ருங்களேன். பளீஸ்......ப்ளீஸ்....ப்ளீஸ்.....

அன்சாரி. இதத்தான் எல்லாரும் சொல்லுறாங்க..

அஸ்லாம். ஐயோ....என்ன விட்ருங்க ப்ளீஸ்..... கொஞ்சம் இரக்கம் காட்டுங்க...

அன்சாரி.  அப்படியென்றால் உனக்கு பதிலாக வேறு ஓரு உயிரை கொடு நான சென்று விடுகிறேன்.

அஸ்லாம். இதோ ஓரே நிமிஷம்.....ப்போ வர்ரேன்....எனக்காக உயிர் குடுக்க எங்க வீட்ல நிறைய பேர் இருக்காங்க இதோ ஓரே நிமிஷம்..... 

                  சித்திகா....சித்திகா....

சித்திகா.  என்னங்க....இந்த நேரத்துல..

அஸ்லாம். நீ அப்ப சொன்னயில்ல.... எனக்கு ஏசாச்சும் ஆனா உன் உயிர கூட குடுப்பேன்னு.....

சித்திகா ஆமாங்க...இப்பக் கூடச் சொல்லுறேன். உங்களுக்காக என் உயிர கூட கொடுப்பேன்.

அஸ்லாம். அதத்தான்டி கேட்க்குறேன்....அது தான் வேணும். உன் உயிர் தான் வேணும்...... வெளில இஸ்ராயீல் என் உயிர்க்காக  வெயிட் பண்றாருடி .....
வேற உயிர குடுத்தா போயிடுறேன்னு சொல்லுறாரு.... வா வந்து உன் உயிர குடுத்து என்ன காப்பாத்துடி சீக்கிரம் வா...

சித்திகா  என்னது இஸ்ராயீலா.........யோவ் என்னய்யா  ஏதோ ஓரு பேச்சிக்கு சொன்னா....உண்மையாவே உயிர வாங்கிருவ போலிருக்கே. போய்யா......போ....உயிராவது ம.......ம.......மண்ணாங்கட்டியாவது.

அஸ்லாம். சரி நாம தங்கச்சிட்ட கேக்கலாம்.

           பாஹிமா.....பாஹிமா....

பாஹிமா. என்னாச்சின்னே. இந்த ஜாமத்துல வந்து எழுப்புற......

அஸ்லாம். இல்ல பாஹிமா.....நீ  எனக்கு ஓன்னுன்னா உயிரயே கொடுப்பேன்னு சொன்னல்ல....

பாஹிமா. ஆமா இப்போ என்னாச்சி......

அஸ்லாம். வா...பாஹி.....எனக்கு எதுவும் ஆகுறதுக்கு முன்னாடி உன் உயிர குடுத்து என்ன காப்பாத்து.

பாஹிமா ஏன்னே.....இந்த ராத்திரி நேரத்துல இப்படி ஓளர்ர......போய் தூங்குன்னே....

அஸ்லாம். ஏய் பாஹி நான் ஓளர்லமா வெளில இஸ்ராயீல் என் உயிர எடுக்க வந்துருக்காரு....அதான் கேட்க்கிறேன் வாம்மா....வந்து உன் உயிர குடுமா.....

பாஹி. என்னது உயிரா.....என்னமோ கத்தரிக்கா தக்காளி கேட்குற மாரில்ல கேட்குற. பணம் வாங்க வந்தா... நீ என் உயிரயே வாங்கிருவ போலருக்கு.  உன் பணமும் வேனாம் ஓன்னும் வேணாம்....ஆள விடுப்பா.... நான் உயிரோட ஊரு போய் சேர்ரேன்.

அஸ்லாம். ஐயோ....நான் என்ன செய்வேன்.....சரி நா...பெத்த புள்ளய்ட்ட கேட்கலாம். 
                  ஹாதிப்.......ஹாதிப்.....

ஹாதிப். என்ன டாடி....ஏன் டாடி தூங்கும் போது கூட டிஸ்சர்ப் பண்ணுற  மிட் நைட் ல கூட உன் தொல்ல தாங்க முடியல.

அஸ்லாம். டேய் ஹாதிப்....நீ என்ன நல்லா பாத்துக்குவேன்னு சொன்னயில்ல...

ஹாதிப்.  ஆமா அதுக்கு இப்போ என்ன.....

அஸ்லாம். வெளியில இஸ்ராயில் என் உயிர கேட்டு வந்துருக்காருடா...

ஹாதிப். குடுக்க வேண்டியது தானே...

அஸ்லாம். டேய் நீ என்ன காப்பாத்துறதா சொன்னல்லடா....

ஹாதிப். போங்க டாட்.....ஜோக் பண்ணாதிங்க டாடி எனக்கு தூக்கம் தூக்கமா வருது ஸ்வீட் ட்ரீம்ஸ் பாய்

அஸ்லாம். ஐயோ.....நான் இப்போ என்ன செய்வேன்....கட்ன மனைவியும் போய்ட்டா....பெத்த புள்ளயும் போயிருச்சி....கூடப் பொறந்த தங்கச்சியும் விட்டுட்டு போய்ட்டா....  இப்போ என்ன பண்ணுறதுன்னே தெரியலியே...

                  (இருமல் சப்தம்).

                   அம்மா....அம்மா....

சபரா. என்னப்பா .....என்னாச்சிப்பா.....ஏன் உம் முகம்லா வேர்த்து கிடக்கு.....ஐயோ என்னப்பா உன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு
ஐயோ.....யா அல்லாஹ்.....என் மகனுக்கு என்ன ஆச்சி

அஸ்லாம். அம்மா......வெளியில இஸ்ராயில் வந்து என் உயிர எடுக்குறதுக்காக காத்திருக்காருமா......வேற ஓரு உயிர குடுத்தா போயிட்றேன்னு சொல்லுறார்மா...

சபரா. என்னது உன் உயிர எடுக்க வந்திருக்காங்களா.....  கவலைப்படாதப்பா....உனக்காக என் உயிர நான் குடுக்குறேன். என் உயிர குடுத்து எப்படியாவது நான் காப்பாத்துறேன்.  நி இங்கயே இரு.....வெளியில வராத... நான் மட்டும் போறேன்.

எங்க அந்த இஸ்ராயீல்......

இஸ்ராயீல்.....யெப்பா இஸ்ராயில்.....

எங்க இருக்க ....

என் உயிர எடுத்துக்கோ....என் மகன விட்டுரு.....

என் உயிர எடுத்துக்கோ....என் மகன விட்டுரு..... 

இஸ்ராயீல்.....நீ எங்க இருக்க....

இஸ்ராயீல்.....நீ எங்க இருக்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக