பக்கங்கள்

திங்கள், 24 டிசம்பர், 2012

ஜின்கள்




கேள்வி. ஜின்கள் என்றால் யார்..?


பதில். ஜின்கள் நெருப்பினால் படைக்கப் பட்ட அல்லாஹ்வின் படைப்பினங்கள். நாய், பன்றி, உருவங்களிலும் உருவெடுப்பார்கள்.


கேள்வி. ஜின்கள் எப்படிப்பட்டவர்கள்..?


பதில்.ஜின்களில் மனிதர்களைப் போன்றே ஆண், பெண், இருபாலர் இருக்கின்றனர். அவர்களில் முஃமீன்களும் காபிர்களும் உண்டு. அவர்களின் உணவு மலம், எலும்பு,போன்றவைகளின் சத்துக்களாகும்.


கேள்வி. ஜின்களை படைத்ததன் நோக்கம் என்ன..?


பதில். மனிதர்களைப் போன்றே ஜின்கள் அல்லாஹ்வை வணங்கி அவனை அடைவதற்க்காகவே படைக்கப்பட்டுள்ளனர்.
கேள்வி. நம் விடுகளில் வரும் பாம்பு, ஜின்னாக இருக்கலாம். எனவே தான் பெருமானார் அவர்கள் பின்வருமாறு கூறுவதற்கு நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள்.


ختمت بالله العلى العظيم وبحق خاتم سليمن بن داود عليه السلام
      கதம்து பில்லாஹில் அலிய்யில் அழிம். வபி ஹக்கி காத்தமி ஸுலைமான் ப்னு தாவூத் அலை
மகத்தான உயர்வான அல்லாஹ்வைக் கொண்டும் நபி ஸூலைமான் அலை அவர்களின் பொருட்டாலும் நான் நிச்சயமாக முத்திரையிடுகிறேன். என்பது இதன் பொருளாகும்.


கேள்வி. இப்லீஸ் ஜின் இனத்தைச் சார்ந்தவனா..?


பதில். ஆம், இப்லீஸ் ஜின்களின் தந்தையாகும்...?


கேள்வி. 103. என்ற எண் யாரைக் குறிக்கிறது..?


பதில். இப்லீஸைக் குறிக்கிறது.


கேள்வி. இப்லீஸின் அந்தஸ்து எப்படி இருந்தது..?


பதில். இப்லீஸ் சொர்க்கத்தின் அதிபதியாக 40 ஆயிரம் ஆண்டுகளும், மலக்குமார்களுடன் 80 ஆயிரம் ஆண்டுகளும், மலக்குமார்களுக்கு ஆசிரியராக 20 ஆயிரம் ஆண்டுகளும்,    ق கர்ருபீன் என்ற மலக்குகளுக்கு தலைவராக 30ஆயிரம் ஆண்டுகளும் ரவ்ஹானியீன் என்ற மலக்குகளுக்கு தலைவராக 10000. ஆண்டுகளும் இருந்தது மட்டுமின்றி அர்ஷை சுற்றி 14000 ஆண்டுகளும் தவாபு செய்திருக்கின்றான்.


கேள்வி. இப்லீஸுக்கு என்னென்ன பெய்கள் உண்டு...?


பதில். இப்லீஸூக்கு பின்வருமாறு பெயர்கள் உண்டு.


1.வது வானத்தில் عابد ஆபித் என்றும்.


2.வது வானத்தில் زاهد ஜாஹித் என்றும்.


3.வது வானத்தில் عارف ஆரிப் என்றும்.


4.வது வானத்தில் வலி என்றும்.


6.வது வானத்தில் காஜின் என்றும்


7.வது வானத்தில் அஜாஜீல் என்றும்.


லவ்ஹுல் மஹ்பூலில் இப்லீஸ் என்றும் பெயர்கள் உண்டு.


கேள்வி. இவ்வளவு சிறப்பு பெற்ற இப்லீஸ்க்கு ஏன் இந்த இழிநிலை ஏற்ப்பட்டது...?


பதில். நபி ஆதம் அலை அவர்களுக்கு ஸூஜூது செய்ய அல்லாஹ் கட்டளையிட்டபோது பணியாத காரணத்தால் தான்.


கேள்வி. இப்லீஸ் என்பதன் பொருள் என்ன...?


பதில். தடுமாற்றத்தை குழப்பத்தை ஏற்ப்படுத்துபவன்.


கேள்வி. ஷைத்தான் என்பதன் பொருள் என்ன..?


பதில். அல்லாஹ்வின் ரஹ்மத்தை விட்டும் தூரமானவன்.

1 கருத்து:

  1. ஜின்னைப்பற்றி தெளிவாக எழூதிருக்கிர நீங்கள் ஜின்னில் எந்தப்பிரிவைச் சார்ந்தவர்கள் .

    பதிலளிநீக்கு