பக்கங்கள்

வியாழன், 14 ஜூன், 2012

திரும்பிப் பார்......!




الم يجدك يتيما فاوى   ووجدك ضال فهدى ا  ووجدك عايلا
فاغنى  فما اليتيم فلا تقهر  واماالساءل فلا تنهر

மனித வாழ்கை என்பது ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட ஓரு பாதையாகும் வாழ்வின் அடிக்கோட்டில் இருப்பவர்கள் எப்போதும் அடிக் கோட்டிலேயே இருப்பதில்லை.ஓரு நேரம் இல்லா விட்டாலும் மற்றொரு நேரம் உயர்நிலையை அடைவார்கள்.


அவ்வாறு உயர்நிலையை அடைந்த சிலர் தனது முற்க்கால நிலயை முற்றும் மறந்து விடுகின்றனர். ஏதோ தலைமுறை தலைமுறையாக செல்வந்தர்களாக வாழ்ந்தவர்களைப் போன்று பாவனை செய்கின்றனர். பெருமை கொள்கின்றனர்.


ஆனால் தனது கடந்த காலத்தை என்றும் நினைவிலிருத்தி அதற்க்கு தக்கவாறு தநது வாழ்க்கை நிளையை அமைத்துக் கொண்டவரே சிறந்தவர். இக் கருத்தை இந்த திருவசனங்கள் மூலம் அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு போதிப்பது போன்று சமுதாயத்தாய அரங்கில் சமர்ப்பிக்கிறான்.


நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு அவர்களின் மருமகன் ஹஸ்ரத் உதுமான் ரலி அவர்கள் ஓரு திராட்சை கொத்தை அன்பளிப்பாக தருகிறார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அதை உண்ணத்துவங்கும் போது வாசலில்  பசியாக இருக்கிறது ஏதாவது தாருங்கள்.  என்றொரு குரல் கேட்க்கிறது. உடனே பெருமானார் ஸல் அவர்கள் பெருமனதுடன் அத் திராட்ச்சைப் பழத்தை குரலுக்குரியவரிடம் கொடுக்கும்படி உத்தரவிடுகிறார்கள்.


சுவையான கனியை நாயகம் ஸல் உண்டு மகிழவேண்டும். அதை அந்த அழகை நாம் கண்குளிர காணவேண்டும் என ஆசைப்பட்ட உதுமான் ரலி அவர்களுக்கு மிக்க ஏமாற்றமாகப் போய் விட்டது. உடனே அந்த ஏழையிடம் சென்று இந்த பழத்திற்க்குரிய விலையை நான் உமக்கு தருகிறேன். இந்த பழத்தை தருகிறீரா.... என கேட்க்கிறார்கள். அந்த ஏழை சம்மதிக்கவே உரிய தொகையை அளித்து பழத்தைப் பெற்று மீண்டும்  நாயகம் ஸல் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.


நாயகம் ஸல் அவர்கள் மீண்டும் உண்ணத் துவங்கும் போது அதே ஏழையிடமிருந்து அதே குரல் திரும்பவும் ஓலிக்கிறது. கருணை நாதருக்கு அக் குரலை அலட்சியம் செய்யத் தோன்றவில்லை. திரும்பவும் அவருக்கே அப்பழத்தை ஈந்து விடுகிறார்கள்.


அதனால் மனம் வருந்திய உதுமான் ரலி அவர்கள் அந்த ஏழையிடம் அக்கனியை இரண்டாம் முறையாக விலை கொடுத்து வாங்கி நாயகம் ஸல் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறார்கள். நாயகமும் உண்ணத் துவங்குகிறார்கள். அதே குரல் அந்த ஏழையிடமிருந்தே திரும்பவும் ஓலிக்கிறது. அதை செவியுற்ற நாயகம் ஸல் அவர்கள்    (அபாயிவுன் அம் அன்த்த ஸாயிலுன்)       நி என்ன வியாபாரியா.... அல்லது யாசகம் கேட்ப்பவரா... என்று யாசகம் கேட்ப்பவரை கடிந்து கொள்கிறார்கள்
அப்போது இறைவன் இத்திருவசனங்களை அருளச் செய்கிறான்.


الم يجدك يتيما فاوى   ووجدك ضال فهدى ا  ووجدك عايل فاغنى  فما اليتيم فلا تقهر  واماالساءل فل تنهر


நீர் அநாதையாக இருந்த போது அவன் ஆதரவளிக்கவில்லையா... நீர் நேரிய வழி அறியாதவராக இருந்த போது அவன் வழி காட்டவில்லையா... நீர் ஏழ்மை நிலையில் இருந்த போது அவன் செல்வந்தராக்கவில்லையா... எனவே நீர் அநாதைகளை அடக்கவேண்டாம் யாசித்தவரை விரட்ட வேண்டாம்.  (அல்குர்ஆன்.93. 6)


நாயகம் ஸல் அவர்கள் அந்த வினோதமான யாசகரைக் கடிந்து கொண்டது இறைவனுக்கு பொருத்தமாகப் படவில்லை. எனவே உமது முற்க்காலத்தை சிந்தனை செய்து பார்ப்பீராக என்று உபதேசிக்கிறான்.


வாழ்க்கையின் உயர் நிலையில் உள்ளோர் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தார்களென்றால் பெருமையும், அகம்பாவமும் கொள்ளமாட்டார்கள் அவர்களிடம் தருமமும் தயாளமும் நிரம்பி வழியும்.


முதியோர், தாங்களும் ஓரு காலத்தில் இளைஞராக இருந்தவர் தாம் என்பதை எண்ணத்தில் கொண்டால் இளைஞர்கள் மீது வெறுப்பை உமிழமாட்டார்கள்.


அறிஞர்கள் தங்களுக்கு அறியாமைக்குப் பின் தான் ஞானம் கிடைத்துள்ளது என்பதை சிந்தனையிற்க் கொண்டால் அறியாதவர்களை அற்ப்பமாகக் கருதமாட்டார்கள்.


அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த வாழ்வு புதியதுதான் என்ற உண்மையை மனதிலிருத்தினால் அடக்குமுறை செய்ய மாட்டார்கள்.


இஸ்லாமிய சம்ராஜ்யத்தின் இரண்டாம் ஜனாதிபதி ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் பொது மக்களின் மனு நீதிகளை கவனிப்பதற்க்காக பள்ளிவாசலில் குறிப்பிட்ட நேரம் அமர்ந்திருக்கும் பழக்கம் உடையவர்கள் ஓரு நாள் அவ்வாறு அமர்ந்து விட்டு வீட்டுக்கு திரும்பிய போது ஓருவர் ஓடோடி வந்து தனக்கு நேர்ந்து விட்ட கொடுமைப் பற்றி முறையிட்டார். அப்போது ஜனாதிபதி அவர்களுக்கு கடும் கோபம் வந்துவிட்டது.  நான் நியாயம் வழங்குவதற்க்காக காத்திருக்கும் போது ஓருவரும் வரமாட்டிர்கள். பின்னர் எனது சொந்த வேலையில் ஈடுபடும் போது வந்து தொல்லை கொடுப்பீர்கள் என்று கடிந்து வந்தவரை சாட்டையால் விரட்டியடித்து விட்டார்கள்


அவர் அவ்விடத்தைவிட்டு அகன்ற பிறகு ஜனாதிபதி அவர்களுக்கு தான் செய்தது முறையாகத் தோன்றவில்லை. அதற்க்காக மிகவும் வருந்தியவர்களாக தனது இல்லத்திற்க்குள் சென்று உமரே...ஓட்டகம் மேய்க்க கூட தகுதி இல்லாதவன் என்று உன் தந்தையால் ஓதுக்கப்பட்ட உன்னை இறைவன் நாடாளும் தலைவன் ஆக்கவில்லையா....?  

வழியறியாது தடுமாறிய உனக்கு அவன் வழி காட்டவில்லையா....


ஏழையாக இருந்த உன்னை இறைவன் செல்வந்தனாக்கவில்லையா....


அல்லாஹ் உனக்கு அருள் புரிந்த்தற்க்காகவா  அநியாயமாக உன்னிடம் முறையிட வந்தவரை அடித்து விரட்டினாய் என்று கூறிக் கொண்டே தம் மேனியின் மீதே சாட்டையால் அடித்துக் கொண்டார்கள்


 ஆம்……! அவர்களின் நடவடிக்கை நம் அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும். 

                                                
                                              O.M.அப்துல் காதர்.பாகவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக