பக்கங்கள்

வியாழன், 24 மே, 2012

நோன்பில் சூரியன் மறையாவிட்டால்.......?






இமாம் அபூயுசுப் (ரஹ்) ஓர் நாள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஓரு மாணவரைக் கவனித்த இமாமவர்கள் கூறினார்கள்...மாணவரே...!   உன் வகுப்பு மாணவர்கள் அவ்வப்போது கேளவி கேட்டு விளக்கம் பெறுகிறார்கள். ஆனால் நீ மட்டும் எதுவும் கேடப்பதில்லை.உனக்கு சந்தேகம் எதுவும் தோன்றுவதில்லையா..
எனக்கேட்டார்கள்…?


மாணவரும் இனி இனஷா அல்லாஹ்....நானும் கேள்விகளை எழுப்புகிறேன் என்றார்.ஓரு நாள் இமாமவர்கள் சூரியன் மறைந்ததும் நோன்பு திறக்க வேண்டும் என்ற சட்டத்தை விளக்கி பேசினார்கள். அப்போது இந்த மாணவர் கேட்டார்......ஹஜ்ரத்….! ஏதாவது ஓரு நாள் சூரியன் மறையாவிட்டால் என்ன செய்வது...?


சக மாணவர்கள் பேராசிரியப் பெருந்தகை இருப்பை மறந்து சிரித்தார்கள்...இமாமவர்களும் சிரித்துக் கொண்டே மாணவரே... நீ கேள்வி எதுவும் கேட்க்க வேண்டாம். முன்பு போல் மௌனமாகவே இருந்து விடு என்று கூறியதுடன் கதையொன்றயும் சொன்னார்கள்.


ஓரு வீட்டிற்க்கு மருமகள் ஓருத்தி வந்தாள். அவள் இல்லத்தில் எவரிடமும் பேசுவதே இல்லை.ஓரு நாள் மாமியார் நீ...ஏன் பேசுவதே இல்லை. பெண்கள் ஓருவரோடொருவர் பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டாமா என வினவினார் மகிழ்ந்து போன மருமகள் இனிமேல் மற்றவர்களைப் போல் நானும் பேசுகிறேன் என்றாள்.


ஓருநாள் மருமகள் கேட்டாள்  மாமி....! உங்கள் மகன் மரணமடைந்து விட்டால் என்னை வேறு எவருக்காவது மணம் முடித்துக் கொடுப்பீர்களா....?     அல்லது உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்வீர்களா....?    எனக் கேட்டாள்.


அதிர்ச்சியடைந்த மாமியார் கூறினார்....மருமகளே...மகராசி டி நீ.
நீ யாரிடமும் பேச வேண்டாம். முன்பு போல பேசா மடந்தையாகவே இருந்து விடு    .கேட்டாயே..... ஓரு கேள்வி..உன்னை பேச விட்டால் இன்னும் என்னவெல்லாம் கேட்ப்பாயோ..வேண்டாம் மருமகளே வேண்டாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக