பக்கங்கள்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

விபத்துக்கள் தரும் விழிப்புணர்வு








أَيْنَمَا تَكُونُوا يُدْرِكُّمْ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ

அரக்கோணத்தில் இரயில் விபத்து – 10 க்கும் மேற்பட்டோர் பலி.

இன்றைய பயணமும் வாழ்வும் பாதுகாப்பானது என்ற எண்ணம் பொதுவாக இருக்கிறது.

ஓரளவுக்கு அது உண்மை தான்

முன்னர் ஏற்பட்ட பிரசவ கால இறப்பு பெரு நோய்களால் ஏற்ப்டுகிற மரணம் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறது. அதனால் இன்றைய உலகு இறப்பு விகிதத்தை குறைத்திருக்கிறது.

என்றாலும் திடீர் மரணங்களும் இப்போது சகஜமாகிவிட்டன.

இரவு மனைவியுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு தூங்கினார் ஒருவர்.  காலையில் மகள் வந்து பள்ளிக் கூடம் போய்ட்டு வர்றேன் என்று சொல்லி விட்டுப்போனாள். 8.30 மணிக்கு மனைவி வந்து என்ன இன்னக்கு இவ்வளவு நேரமா தூங்கிறீங்க என்று எழுப்பிய போதுதான அவர் இறந்து போனது தெரிந்தது.

1980 நடைபெற்ற பிரபலமான விமான விபத்து- இன்னும் மூன்று நிமிடங்களில் நாம் டோக்கியோ விமான நிலையத்தில் இறங்கி விடுவோம் என்று விமானி அறிவித்தார். சில விநாடிகளில் விமானம் விபத்துக்குள்ளானது.அனைவரும் பலி.

நம்முடைய துல்லியமான திட்டமிடுதல்களை தாண்டி இது போன்ற் அதிர்ச்சிகரமான மரணங்கள் அவ்வப்போது நிக்ழ்கின்றன.

மனிதன் கையை பிசைந்து கொண்டு நிற்கிறான்.

எப்போது மரணம் வரும் என்பதை கண்டு பிடிக்க முடியாத்து தான் அறிவுலகை திகைப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

இது போன்ற திடீர் அதிர்வுகளை கேள்விப்படுகிற போது நாம் செய்ய வேண்டியவை  

முதலாவது
·         அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரவேண்டும்
ஏழுவகை மரணத்திலிருந்து பெருமானார் (ஸல்) பாதுகாப்பு கோரினார்கள்
·        عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ مَوْتِ الْفَجْأَةِ وَمِنْ لَدْغِ الْحَيَّةِ وَمِنْ السَّبُعِ وَمِنْ الْحَرَقِ وَمِنْ الْغَرَقِ وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ وَمِنْ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ  - احمد – 6306
·         வாழ் ஆசைப்பட பெருமானார் கற்று கொடுத்தார்கள்
·         நீண்ட கால ம் வாழ ஆசைப்படனும்! ஆனால் எப்படி?
·        عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ أَنَّ أَعْرَابِيًّا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ خَيْرُ النَّاسِ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ  - ترمذي
·         மரணத்தை ஆசைப்படக்கூடாது.
·        َقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَمَنَّى أَحَدُكُمْ الْمَوْتَ وَلَا يَدْعُ بِهِ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُ إِنَّهُ إِذَا مَاتَ أَحَدُكُمْ انْقَطَعَ عَمَلُهُ وَإِنَّهُ لَا يَزِيدُ الْمُؤْمِنَ عُمْرُهُ إِلَّا خَيْرًا
·        عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمْ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ فَإِنْ كَانَ لَا بُدَّ فَاعِلًا فَلْيَقُلْ اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي
·         
·         நீண்ட கால வாழ்வின் நன்மை
·        عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ إِذَا بَلَغَ الرَّجُلُ الْمُسْلِمُ أَرْبَعِينَ سَنَةً آمَنَهُ اللَّهُ مِنْ أَنْوَاعِ الْبَلَايَا مِنْ الْجُنُونِ وَالْبَرَصِ وَالْجُذَامِ وَإِذَا بَلَغَ الْخَمْسِينَ لَيَّنَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ حِسَابَهُ وَإِذَا بَلَغَ السِّتِّينَ رَزَقَهُ اللَّهُ إِنَابَةً يُحِبُّهُ عَلَيْهَا وَإِذَا بَلَغَ السَّبْعِينَ أَحَبَّهُ اللَّهُ وَأَحَبَّهُ أَهْلُ السَّمَاءِ وَإِذَا بَلَغَ الثَّمَانِينَ تَقَبَّلَ اللَّهُ مِنْهُ حَسَنَاتِهِ وَمَحَا عَنْهُ سَيِّئَاتِهِ وَإِذَا بَلَغَ التِّسْعِينَ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَسُمِّيَ أَسِيرَ اللَّهِ فِي الْأَرْضِ وَشُفِّعَ فِي أَهْلِهِ - احمد – 5369
·         திடும் என ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு பெறவும் பெருமானார் கற்றுக் கொடுத்தார்கள்.

·         حَدَّثَنَا أَبُو مَوْدُودٍ عَمَّنْ سَمِعَ أَبَانَ بْنَ عُثْمَانَ يَقُولُ سَمِعْتُ عُثْمَانَ يَعْنِي ابْنَ عَفَّانَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ

இதே அபான் அவர்களுக்கு ஒரு திடீர் துன்பம் ஏற்பட்ட்து. அவரிடமிருந்து ஹதீஸை கேட்டவர் ஆச்சரியமாக பார்த்தார்

·         فَأَصَابَ أَبَانَ بْنَ عُثْمَانَ الْفَالِجُ فَجَعَلَ الرَّجُلُ الَّذِي سَمِعَ مِنْهُ الْحَدِيثَ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ مَا لَكَ تَنْظُرُ إِلَيَّ فَوَاللَّهِ مَا كَذَبْتُ عَلَى عُثْمَانَ وَلَا كَذَبَ عُثْمَانُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنَّ الْيَوْمَ الَّذِي أَصَابَنِي فِيهِ مَا أَصَابَنِي غَضِبْتُ فَنَسِيتُ أَنْ أَقُولَهَا

திடீர் மரணங்களிலிருந்து கிடைக்கிற இரண்டாவது பாடம்

·         அல்லாஹ்வுடைய தீர்மாணம் மனிதர்களின் எல்லாவகையான கறபனைகளையும் தாண்டி செயல்படக்கூடியது என்பதை உறுதியாக உணர வேண்டும். வாழ்க்கையின் எந்த வச்தியும் வாய்ப்பும் மரணத்தைப் பற்றிய சிந்தனையிலிருந்து திசை திருப்பி விடக்குக்கூடாது.
·         மரணத்தை நினைதே வாழ்க்கையை அனுபவிக்காமலும் இருத்தல் கூடாது.
·         மரணத்தை மறந்த ஒரு வாழ்வும் தகாது.

عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَجَلَسَ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَبَكَى حَتَّى بَلَّ الثَّرَى ثُمَّ قَالَ يَا إِخْوَانِي لِمِثْلِ هَذَا فَأَعِدُّوا  - إبن ماجة

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ يَعْنِي الْمَوْتَ - إبن ماجة

இந்த சிந்தனை வாழ்வை பக்குவப்படுத்தக்கூடியது. நிலைப்படுத்தக் கூடியது.

மரணத்தைப் பற்றிய சிந்தனையோடு வாழும் மனிதன் தைரியத்தோடு மரணத்தை எதிர் கொள்வான்

மரணத்தைப் பற்றி சிந்தித்தால் வாழ்வு ரசிக்காது என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு.

நான் மரணிக்கிற போது என்னுடைய மரணம் எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிடுகிற மனிதனே சிறப்பாக வாழ்வான்.

ஒரு ஆங்கிலக் கவிஞன் சொன்னான் : நீ மரணிக்கிற போது உனக்காக சவப்பட்டி தயாரிக்கிறவன் கூட அழவேண்டும் –.

عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّ الْأَنْصَارِيِّ أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَقَالَ مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا الْمُسْتَرِيحُ وَالْمُسْتَرَاحُ مِنْهُ قَالَ الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَأَذَاهَا إِلَى رَحْمَةِ اللَّهِ وَالْعَبْدُ الْفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ وَالْبِلَادُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ

( சிற்ந்த வாழ்வுக்கான அற்புதமான இலக்கணம் இது. ஒருவனின் மரணம் அவனுக்கு ஓய்வாக அமைய வேண்டும். தொலஞ்சாண்டா பாவி என மற்றோர் நினைக் கூடாது.)

நான் நல்லவனாக மரணிக்க வேண்டும் என்ற நினைப்பு எப்போது மனிதனை நற்செயல் செய்ய தூண்டும்

எந்த நிமிடமும் மரணம் வரலாம் என்ற சிந்தனை நல்லதை உடனே செய்யத்தூண்டும்.

இறைவனைப் பற்றிய குறைந்த பட்ச அச்சம் மனிதனை நல்லவனாக்கும்.
இறைவனைப் பற்றிய குறைந்த பட்ச அச்சம் கூட மனிதனுக்கு பெரும் நன்மையை தரும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَجُلٌ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ فَإِذَا مَاتَ فَحَرِّقُوهُ وَاذْرُوا نِصْفَهُ فِي الْبَرِّ وَنِصْفَهُ فِي الْبَحْرِ فَوَاللَّهِ لَئِنْ قَدَرَ اللَّهُ عَلَيْهِ لَيُعَذِّبَنَّهُ عَذَابًا لَا يُعَذِّبُهُ أَحَدًا مِنْ الْعَالَمِينَ فَأَمَرَ اللَّهُ الْبَحْرَ فَجَمَعَ مَا فِيهِ وَأَمَرَ الْبَرَّ فَجَمَعَ مَا فِيهِ ثُمَّ قَالَ لِمَ فَعَلْتَ قَالَ مِنْ خَشْيَتِكَ وَأَنْتَ أَعْلَمُ فَغَفَرَ لَهُ
திடீர் மரணங்களைப் பற்றிக் கேள்விப் படுகிற போது . மரணம் இப்படியும்  வரலாம் என்ற எச்சரிக்கை அடைய வேண்டும். பாதுகாப்பு கோர வேண்டும்.

அதே நேரத்தில் மரணம் வரும் போது நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை யோசித்துச் செயல்பட வேண்டும்
இரயில் விபத்தில் உறவினர்களைப் பலி கொடுத்தவர்களுக்கு அல்லாஹ் தகுந்த ஆறுதலை தருவானாக! அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களுக்கு சிறந்த மாற்று ஏற்பாடுகளை செய்தருள்வானாக! காயம் பட்டவர்கள் விரைவாக குணமடை அல்லாஹ் கிருபை செய்வானாக!

நமது நாட்டில் உலகிலும் இத்தகைய விபத்துக்கள் ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!

நமது பயணங்கள அனைத்தையும் அல்லாஹ் பாதுகாப்பானதாக ஆக்கியருள்வானாக!

ஒரு தனிமனிதனின் (மின்சார ரயிலின் ஓட்டுனர்) அலட்சியத்தால் கவனக்குறைவால் எவ்வளவு கொடுரமான விளைவு ஏற்பட்டுள்ளது.

எந்த ஒரு மனிதனும் தனது பொறுப்பை அலட்சியமாக தவற விடுகிற போது ஏற்படுகிற இழப்பை உணர்ந்து கொள்ள வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக