பக்கங்கள்

வெள்ளி, 3 மார்ச், 2023

நம் உடலைப் பற்றி அறிவோம்...


 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு நம் உடலைப் பற்றி அறிவோம் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

 

என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே..

வல்லோன் அல்லாஹ் தன் அருள்மறையாம் திருகுர்ஆனில் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறான்.

 وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

. இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 16:18.

என்பதாக கூறுகிறான்.

மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் நமக்கு கணக்கிட முடியாத நிஃமத்துகளை வழங்கியுள்ளதாக கூறுகிறான்.

அந்த வகையில் நமது உடலில் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள நிஃமத்துகளை நாம் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்ய

ஒரு மனிதனின் பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வதாகும்.