பக்கங்கள்

சனி, 31 அக்டோபர், 2015

அழுகை.






وَأَنَّهُ ۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ                                    

53:43. அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழச் செய்கிறான்.


இமாம் ராஸி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
மூன்று சிரிப்பு அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

1. தொழுகையில் சிரிப்பது.

2. திக்ர் மஜ்லிஸில் சிரிப்பது.

3. ஜனாஸாவின் அருகில் சிரிப்பது.

மூன்று தூக்கம் அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

1. மஃரிப் தொழுகைக்கு பின் தூங்குவது. இஷா தொழுகை தப்பிப் போய் விடும் என்பதால்.

2. தொழுகையில் தூங்குவது.

3. திக்ர் மஜ்லிஸில் தூங்குவது.


அழுகையில் மொத்தம் பத்து வகையான அழுகை இருக்கிறது என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

1. ஆனந்த கண்ணீர்.

2. கவலையினுடைய கண்ணீர்.

3. இரக்கத்தினுடைய கண்ணீர்.

4. பயத்தினால் வரும் கண்ணீர்.

5. பொய்யான கண்ணீர். காசுக்காக ஒப்பாரி வைக்கும் பெண்களின் அழுகை.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஒப்பாரி வைக்கும் பெண்கள் நாளை கியாமத் நாளில் தலைவிரி கோலமான நிலையில் தலை மீது கை வைத்தவர்களாக அல்லாஹ்வினுடைய சாபத்தின் முக்காடு அணிந்தவர்களாக நாய் குரைப்பதை போன்று கப்ரிலிருந்து எழுப்ப படுவார்கள் என கூறினார்கள்.

6. ஒத்துப் போக்க் கூடிய கண்ணீர். உதாரணமாக சிலர் அழுவதை பார்த்தாலே நமக்கு கண்ணீர் வருவது.

7. பாசம் பிரியத்தினால் வரும் கண்ணீர்.

8. வேதனையினுடைய கண்ணீர்.

9. நயவஞ்சக கண்ணீர். அதாவது கண் கண்ணீர் வடிக்கும். ஆனால் கல்பு கல் நெஞ்சமாக இருக்கும்.

10. பலஹீனத்தினுடைய கண்ணீர்.


கஃபுல் அஹ்பார் ( ரலி ) அவர்கள் கூறுகிறார்கள்.

உலகில் ஒரு மனிதன் அழுக வேண்டும் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்புகிறான் அவர் அந்த மனிதரின் விலாப்பகுதியில் தடவினால் தான் அம்மனிதனுக்கு கண்ணீர் வரும் என்றார்கள்.

يا أيها الناس! ابكوا ، فإن لم تبكوا فتباكوا ، فإن أهل النار يبكون حتى تسيل دموعهم في وجوههم كأنها جداول حتى تنقطع الدموع، فتسيل - يعني - الدماء، فتقرح العيون ، فلو أن السفن أرخيت فيها لجرت ).
قال الالباني في السلسلة الضعيفة

நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அனஸ் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மக்களே...! இறைவனிடத்தில் நீங்கள் அழுங்கள். அப்படி அழுக முடியவில்லையென்றால் அழுவது போல நடியுங்கள். ஏனென்றால் நரகவாதிகள் அருவியை போல கண்ணீர் வடிப்பார்கள். கண்ணீர் தீர்ந்த பிறகும் ரத்தக்கண்ணீர் வடித்து அழுவார்கள். அந்த அழுகையின் காரணமாக கன்னமெல்லாம் பொக்களங்களாக மாறிவிடும். அவர்கள் அழுத கண்ணீரில் கப்பலை ஓட விட்டால் கூட அது ஓடும் என்றார்கள்.


நபி நூஹ் (அலை) அவர்களுக்கு நூஹ் என பெயர் வந்ததற்க்கான காரணம். நூஹ் என்றால் அழக்கூடியவர் என்று பொருள்.
அன்றொருநாள் ஒரு நாயை பார்த்து இவ்வளவு அசிங்கமான படைப்பாக இருக்கிறாயே என ஒரு நாயை பார்த்து சொன்ன பொழுது அல்லாஹ் அவரை நோக்கி கூறினான். எனது படைப்பை குறை கூறுவது அது என்னை குறை கூறுவது போல என கூறிய போது நபி நூஹ் (அலை) அவர்கள் அழுதுவிட்டார்கள்


அல்லாமா அப்துர் ரஹ்மான் ஸபுவ்ரி ( ரஹ் ) அவர்கள் கூறினார்கள்.

இந்த துன்யாவிலுல்ல அனைவரது அழுகையும் நபி தாவூத் (அலை) அவர்களது அழுகையோடு ஒப்பிட்டு பார்த்தால் நபி தாவூத் (அலை) அவர்களின் அழுகைக்கு சமமாகாது.

தாவூத் (அலை) அவர்களது கண்ணீரை காட்டில் அதிகமாக நபி நூஹ் (அலை) அவர்களது கண்ணீருக்கு சமமாகது.

நூஹ் (அலை) அவர்களது கண்ணீரை விட நபி ஆதம் (அலை) அவர்களது கண்ணீர் அதிகமாக இருந்தது. என்றார்கள்.

நபி ஆதம் (அலை) அவர்கள் ஜபலுர் ரஹ்மத் என்ற மலையில் ஒரு அறிவிப்பின்படி 200 வருடம் மற்றொரு அறிவிப்பின் படி 300 வருடம் கண்ணீர் வடித்தார்கள் என்று தப்ஸீர் ரூஹுல் பயானில் இடம் பெறுகிறது.


ஆதம் (அலை) அவர்கள் பூமியில் வடித்த கண்ணீரிலிருந்து அல்லாஹ் பேரிச்சை, கடுகு, லவங்கம், மாசக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றின் மரங்களை விளைவித்தான்.

கடலில் அவர்கள் வடித்த கண்ணீரிலிருந்து அல்லாஹ் வைரக்க கற்களை உருவாக்கினான்.

ஹவ்வா (அலை) அவர்கள் பூமியில் வடித்த  கண்ணீரிலிருந்து அல்லாஹ் மருதாணி, குங்குமப்பூ, சுர்மா ஆகியவற்றின் மரங்களை உருவாக்கினான்.

ஹவ்வா ( அலை) அவர்கள் கடலில் உதிர்த்த கண்ணீரிலிருந்து முத்து, பவளம் உருவாக்கினான்.

இப்லீஸ் பூமியில் வடித்த கண்ணீரால் முற்கள் உருவானது.

இப்லீஸ் கடலில் வடித்த கண்ணீரிலிருந்து முதலை உருவானது,

பாம்பு பூமியில் வடித்த கண்ணீரிலிருந்து தேள் உருவானது.

பாம்பு கடலில் வடித்த கண்ணீரிலிருந்து நண்டு உருவானது.

மயில் பூமியில் வடித்த கண்ணீரிலிருந்து மூட்டை உருவானது.

மயில் கடலில் வடித்த கண்ணீரிலிருந்து அட்டை பூச்சி உருவானது என்று அல்லாமா அப்துர் ரஹ்மான் ஸபுவ்ரி ரஹ் அவர்கள் தப்ஸீர் ரூஹுல் பயானில் கூறுகிறார்கள்.


இந்த உலகில் இறைநேசர்களில் சிலர் கண்ணீருக்கு பதிலாக ரத்த கண்ணீர் வடித்திருக்கிறார்கள்.

அல்லாமா பத்ஹுல் மூவ்ஸிரி (ரஹ்) அவர்களை பார்ப்பதற்காக அவர்களின் சீடர் ஒருவர் சென்றார். அங்கு தனது ஆசிரியரின் கண்ணீர் ரத்தமும் கண்ணீரும் கலந்த நிலையில் கண்ணீர் சிந்தியிருந்தது. சீடர் கேட்டார் அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்லுங்கள் நீங்கள் ரத்தத்தையா கண்ணீராக வடித்தீர்கள் எனக்கேட்ட போது அல்லாமா பத்ஹுல் மூவ்ஸிரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஆம் நான் ரத்தத்தை தான் கண்ணீராக வடித்தேன். நீங்கள் மட்டும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கேட்கவில்லையென்றால் நான் இதை சொல்லியிருக்க மாட்டேன் என்றார்கள்.

ஏன் இப்படி அழுகிறீர்கள் எனக்கேட்ட போது, நான் அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய ஹக்கை ஒழுங்காக நிறைவேற்றவில்லை. ஆகையால் அதற்கு நான் சாதாரணமாக அழுதால் போததாது என்பதால் நான் ரத்ததை கண்ணீராக சிந்தினேன். என்றார்கள்.

அவரது மரணத்திற்கு பிறகு ஒருவரின் கனவில் தோன்றி சொன்னார். அல்லாஹ் என்னை மன்னித்து நெருக்கமாக ஆக்கினான். இவ்வளவு காலம் ஏன் அழுதீர்கள் என என்னை பார்த்து கேட்டான். யாஅல்லாஹ் உனக்கு நிறைவேற்ற வேண்டிய ஹக்கை நான் சரியாக நிறைவேற்றவில்லை என்பதாற்காக கண்ணீர் வடித்தேன் என்றேன்.

மீண்டும் அல்லாஹ் ரத்தக் கண்ணீர் வடித்ததற்கான காரணத்தை கேட்டான். யாஅல்லாஹ் நான் உனக்கு நிறைவேற்ற வேண்டிய ஹக்கை ஒழுங்காக நிறைவேற்றவில்லை. ஆகையால் அதற்கு நான் சாதாரணமாக அழுதால் போதாது என்பதால் நான் ரத்ததை கண்ணீராக சிந்தினேன். என்றார்கள்.

அல்லாஹ் கேட்டான் உங்களது கணக்கு வழக்கு புத்தகத்தில் நாற்பது ஆண்டு காலம் எந்த ஒரு பாவமும் பதிவிடப்படவில்லையே இருந்தும் ஏன் இந்த அழுகை எனக்கேட்டு நெருக்கமாக்கி என்னை மன்னித்தான் என்றார்கள்.


    உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

சனி, 24 அக்டோபர், 2015

திருமணமான புதியதில் பெண்கள்.




திருமணமான புதியதில் பெண்கள்..!மற்றும்
சில ஆண்டுகள்,பல ஆண்டுகளின் அலம்பல்கள்


1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்..
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து...

1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா?
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம். உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.
பல ஆண்டுகள் கழித்து..

1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு

புதன், 14 அக்டோபர், 2015

வாட்ஸ் ஆப்.



அல்லாஹு தஆலா நம்மை படைத்த பொழுது மனித வாழ்விற்கு உடல் ரீதியாக உறுப்புக்கள் ரீதியாக எந்த மாதிரியான பயன்பாட்டிற்கு தேவை என்பதை அறிந்து மிக கச்சிதமாகவும் நேர்த்தியாக வடிவமைத்தான்.

ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ                                             
அவன் எத்தகையவனென்றால் (படைப்புகளனைத்தையும்) படைத்து, பிறகு (அவற்றைச்) செவ்வைப்படுத்தினான்

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

இறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி ....?



  

உண்மையில் கேட்பவனும் கொடுப்பவனுமாக இருக்கின்ற இறைவனுக்கே எல்லாப் புகழும்.
இந்த உலகத்தில் கேட்டுப் பெறுபவர்கள் கொடுத்து சந்தோஷம் அடைபவர்கள் என்று மனிதர்கள் இரண்டு வகையாக உள்ளனர். ஆனால் கேட்பவர்களுக்கும், அவர்களுக்குக் கொடுப்பவர்களுக்கும் உண்மையில் கொடுப்பவனாக இருப்பவன் இறைவன் என்பதே என் நிலைப்பாடு. இதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்கும் என்றே கருதுகிறேன்.

புதன், 7 அக்டோபர், 2015

5 விசயம்.






இமாம் அபு ஹனிபா (ரஹ்) அவர்கள் தனது மகனுக்கு கற்று கொடுத்த 5 விசயம்
இமாம் அபூஹனீபா -ரஹ்- தனது மகன் ஹம்மாத் அவர்களுக்கு 5 ஹதீஸ்களை சுட்டிக்காட்டி இதன்படி நடந்தால் முழு மார்க்கத்தையும் கடைபிடித்தவராகலாம் என்றார்கள்..