ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்.


ஆகுமான காரியங்களில் பெற்றோர்களின் கட்டளைக்கு வழிப்பட வேண்டும்.


அவர்களின் அழைப்பை ஏற்று உடனே செல்ல வேண்டும்..

அவர்கள் கூறும் விசயங்களை கவனத்துடன் கேட்க வேண்டும்.

அவர்கள் முன் உட்காருதல் நிற்குதல் போன்ற விசயங்களில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

அவர்களுக்கு வேதனை தரும் சொல்லை சொல்லாமல், செய்யாமலிருக்க வேண்டும்.

உடலாலும் பொருளாலும் அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்.
அவர்கள் முன் மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும்.

எப்பொழுதும் அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் அனுமதியின்றி பயணம் செய்யாமலிருக்க வேண்டும்.

அவர்கள் மரணித்து விட்டால் ஷரீஅத்திற்கு புறம்பாக கூச்சலிட்டு கதறி அழாமல் மௌனமாக இருக்க வேண்டும்.

அவர்களுக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும்.

அவர்களின் வசிய்யத்தை மரண வாக்கை நிறைவேற்ற வேண்டும்.

அவர்களுக்காக ஸதகா போன்ற நற்காரியங்களை செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமையன்று அவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய வேண்டும்

அவர்களின் உறவினர்களையும், அவர்களுக்கு நெருக்கமானவர்களையும், நல்லமுறையில் நடத்த வேண்டும.

தாதா (தந்தையின் தந்தை)
தாதி (தந்தையின் தாய்.)
நானா (தாயின் தந்தை)
நானி (தாயின் தாய்.)
ஆகியோரும் பெற்றோர்களைப் போன்றவர்கள்.

தாயின் உடன்பிறந்த சகோதர சகோதரிகளை தாயைப் போன்றும்
தந்தையின் சகோதர சகோதரிகளை தந்தையைப் போன்றும் கண்ணியப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக